Home சமையல் குறிப்புகள் மைதா பரோட்டா

மைதா பரோட்டா

21

pa 8தேவையான பொருட்கள்

மைதா – மூன்று டம்ளர்

உப்பு ‍ ஒரு தேக்கரண்டி

சோடாமாவு ‍ ஒரு சிட்டிக்கை

டால்டா = முன்று மேசை க‌ர‌ண்டி

ச‌ர்க்க‌ரை = முன்று தேக்க‌ர‌ண்டி

தண்ணீர் = முக்கால் டம்ளர்

முட்டை = 1 (தேவை ப‌ட்டால்) சேர்த்து கொண்டால் நல்ல ஷாப்டாக இருக்கும்

எண்ணை = சிறிது

எண்ணை + டால்டா = சுட்டெடுக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை

மைதாவில் சோடா,உப்பு, சேர்த்து கலக்கி, டால்டாவை உருக்கி ஊற்றி தண்ணீர் ஊற்றி ஒரு ஃபோர்கால் கிளறி விடவும். போர்கால் கிள‌றி விடுவ‌தால் பிசையும் போது கையில் ஒட்டி கொண்டே வ‌ராது.

சிறிது நேர‌ம் க‌ழித்து கையில் எண்ணை தொட்டு கொண்டு ந‌ன்கு பிசைய‌வும். த‌ண்ணீர் தேவைப்ப‌ட்டால் சிறிது தெளித்து பிசைய‌வும்.

பிசைந்த‌ மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாம‌ல் ந‌ம‌க்கு தேவையான‌ சைஸில் உருண்டைக‌ள் போட்டு எல்லா உருண்டையிலும் எண்ணை த‌ட‌வி ந‌ன்கு ஊற‌விட‌வும். 2 ம‌ணிநேர‌ம் போது மான‌து.

மேலும் ஊறினாலும் ந‌ல்ல‌ இருக்கும்.

ஓவ்வொரு உருண்டையையும் ரொட்டி பல‌கையில் தேய்த்து புட‌டைக்கு கொசுவ‌ம் வைப்ப‌து போல் ம‌ட‌க்கி ம‌று ப‌டி 20 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.
(உட‌னே தேய்த்தால் சுருண்டு சுருண்டு நிற்கும்,கொசுவ‌ம் வைத்து ஊறினால் தேய்க்கும் போது சுல‌ப‌மாக‌ வ‌ரும்).

இப்போது தேய்க்க நல்ல வரும், கடையில் உள்ளது போல் கெட்டியாகவும் செய்யலாம். அது சரியாக உள்ளே வேகாது. வெள்ளையாக இருக்கும். ஆகையால் சிறிது பெரியதாக போட்டு உள்ளேன்

ரெடி செய்த பரோட்டாவை தவ்வாவில் போட்டு சுடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி சுட்டெடுக்கவும்.

சுவையான மைதா பரோட்டா ரெடி, இதை கோதுமையிலும் செய்யலாம்.

குறிப்பு

இதற்கு எல்லா சைட் டிஷும் பொருந்தும். ஒன்றும் இல்லை என்றால் வாழைபழம் தொட்டு கூட சாப்பிடலாம், மாசி, காய் கறி குருமா, பெப்பர் சிக்கன்,மட்டன், சிக்கன், குருமாக்கள், மீன் சால்னா, வெங்காய முட்டை. ஆம்லேட், தக்காளி சட்னி,பொரியல், சைனீஸ் அயிட்டம் சில்லி சிக்கன், பட்டர் சிக்கன். எல்லாமே பொருந்தும்.