Home வீடியோ “மேமோகிராம்” – மார்பக புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை – வீடியோ

“மேமோகிராம்” – மார்பக புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை – வீடியோ

20

மேமோகிராம் பரிசோதனை என்பது என்ன‍? அதுஎந்த மாதிரி யான நோயைக் கண்டறியப் பயன்படுகிறது?-அது எப்ப‍டி எடு க்க‍ப்படுகிறது என்பன போன்ற பல கேள்விகளுக்கு இதோ இங்கே விளங்கங்கள்.
மேமோகிராம் பரிசோதனை
மேமோகிராம் பரிசோதனை என்பது இரண்டு மார்பக ங் களையும்
எக்ஸ்ரே எடுப்பதாகும். இது பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிய இந்த மருத்துவ பரிசோதனை பயன்படுகிறது .
மார்பகப் புற்றுநோய்
மார்பகப்புற்றுநோய் ஒருமார்பகத்திலிருந்து மற்றொரு மார்பகத்திற்கு பரவக் கூடியவாய்ப்புகள் அதிகம். இதனால் பெண்கள் தங்கள து மார்பகத்தை இழக்க‍ வே ண்டிவரும். மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்த பின்பே மருத்துவரால் அதற்கேற்றபடி தகு ந்த சிகிச்சை கொடுக்க முடியும்.

பெண்களுக்கு எந்த வயதில் இந்த மார்பக புற்றுநோய் தாக்கும்?
பொதுவாக 40வயதிற்கு மேற் பட்ட பெண்கள், ஆண்டு தோறும் இந்த‌ மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். 40வயதிற்குகீழ் உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனைசெய்தால், மார்பகச் சதை அடர்த்தியாக இருப்பதால் இந்த பரிசோ தனையின்போது துல்லியமாக கண்டு பிடிக்க முடியாது. அதனால் அந்த வயதினருக்கு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

பெரும்பாலும், குழந்தையில்லா தவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள் பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவமடையும் பெண்க ள், அல்லது 55 வயதிற்குமேலாகி யும் மாதவிடாய் நிற்காத பெண்கள்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கியுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கும் மேலாக உபயோ கிக்கும் பெண்கள், புகையிலை மற் றும் மது பழக்கம் உள்ள பெண்கள்.
குடும்பத்தில் இதற்குமுன் பாட்டி, அம்மா, அக்கா என்று எவருக்காவது மார்பக கேன்சர் இருந்தாலும் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது.

வருடத்திற்கு எத்த‍னைமுறை மேமோகி ராம் பரிசோதனை செய்துகொள்ள வேண் டும்.
வருடத்திற்கு ஒரு முறை மேமோகி ராம் பரிசோதனைசெய்து கொ ண்டால் தான் புற்றுநோயின் தா க்கத்தை தொடக்க நிலையிலே யே கண்டுபிடிக்க முடியும்! ஆக வே எவ்வளவு சீக்கிரம் கண்டறி யவாய்ப்புள்ளதோ, அந்தளவுக் கு குணமாகும் வாய்ப்பும் அதிக ம்.
மேமோகிராம் பரிசோதனை செய்ய‍ப்படும் நேரடி காட்சி அடங்கிய வீடியோ