Home காமசூத்ரா மெதுவாய்… மெதுவாய்…

மெதுவாய்… மெதுவாய்…

47

காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும்.
முழுவதுமாக ஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. எப்பொழுது தொடுவான்? எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மேற்கொண்டு படியுங்களேன்!
ஏங்க வையுங்க
தம்பதியரிடையே அன்றைய தினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்தபணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.
உதட்டில் உரசல்
அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்… மயிலிறகால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம்.
காது மடல்
காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.
கழுத்தின் பின்புறம்
கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்… அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுமாம்.
மூக்கு நுனி
சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக்கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம்.
மசாஜ் விளையாட்டு
தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கின்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.
தொடமல் தொடுங்கள்
சில சமயம் விரல்களால் தொடுவதை விட சில பொருட்கள் உணர்வுகளை கிளறிவிடும். நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்று… மெல்லிய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்… என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.
சிலிர்க்கச் செய்யுங்கள்
முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற்றில் பறக்கச் செய்யுமாம்.
மெதுவாய்… மெதுவாய்…
கால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூலம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.