Home பாலியல் முறைக் கெட்ட உறவு- Incest

முறைக் கெட்ட உறவு- Incest

209

02.jpg_480_480_0_64000_0_1_0-615x505காதலனோடு உடலுறவு வைத்துக் கொள்ள நிர்பந்தம் – Compulsion sex with lover or friend

உலகம் முழுவதும், பல பெண்களும் இளம் பெண்களும் விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள். சில இடங் களில் இதை ‘காதலனின் பலாத்காரம்’ (Date rape) என்றழைக்கின்றனர். இந்த நிர்ப்பந்தம் உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுகளாலும், வார்த்தைகளாலும் கூட அவர்கள் நிர்ப்பந்திப்பார்கள். விருப்பமில்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது.

உங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது உங்களோடு உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சித்தால் (முறைக் கெட்ட உறவு- Incest)

நீங்கள் விரும்பவில்லையெனில் உங்கள் விருப்பத்திற்கு மாறாய், எவ்வளவு நெருக்கமானவராய் இருந்தாலும், அவர் உங்களை தொடக்கூடாது Bad Touch. அது தவிர உங்களை தந்தை, சகோதரன், மாமா, அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற எந்த குடும்ப உறுப்பினரும் உங்களின் பிறப்புறுப்பையோ, அல்லது உடலின் வேறு எந்த பாகத்தையோ, காம உணர்வோடு தொடக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால் unwanted sexual disturbance from others or family members, உடனே நீங்கள் உதவி நாடவேண்டும். வெளியே சொன்னால் உனக்கு ஆபத்து என்று தொட்டவர் பயமுறுத்தினால் கூட, நீங்கள் நம்பும் ஒருவரிடம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொல்லவேண்டும். இந்த விபரத்தை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரிடம் சொன்னால், இன்னமும் நல்லது seek help from your friend or some other who helps you.