Home சமையல் குறிப்புகள் முருங்கைக்கீரை பொரியல்

முருங்கைக்கீரை பொரியல்

20

dsc09191தேவையான பொருட்கள் வருமாறு:-
முருங்கைக்கீரை- 2 கப் அளவு,
வெங்காயம்-4,
பச்சை மிளகாய்-4,
தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்,
பூண்டு, புளி, வத்தல்- சிறிதளவு,
உப்பு தேவையான அளவு,
சமையல் எண்ணெய்- சிறிதளவு.
தாளிப்பதற்கு
வெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி
மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை.
செய்முறை:-
• முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
• தேங்காய் துருவல், வத்தல், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அம்மியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக அரிந்துகொள்ளவும்.
• அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டு, காய்ந்த பின்னர் கீரையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வதக்கவும்.
• சிறிது நேரம் கழித்து, ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காய், வத்தல் உள்ளிட்டவற்றின் கலவையையும் சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். தேவையான உப்பு சேர்க்கவும்.
• பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, பொரியலுடன் சேர்க்க வேண்டும்.
• இப்போது முருங்கைக்கீரை பொரியல் தயார் ஆகிவிடும்.