Home சமையல் குறிப்புகள் முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட்

முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட்

35

21தேவையான பொருட்கள் :
முருங்கைக் கீரை – 1 கட்டு (ஆய்ந்தது)
பொட்டுக்கடலை மாவு – 2 கப்
வெங்காயம் – 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

cooking
செய்முறை :
* பொட்டுக் கடலை மாவை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை போட்டு வதக்கி மாவுடன் கலந்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
* தோசைக்கல் சூடானதும் உருண்டைகளைத் தட்டிப் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

முருங்கைக்கீரை பொட்டுக்கடலை ஆம்லெட் ரெடி