முத்தம் பற்றி நடந்த ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள்
அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம்
முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்க ளை பரிமாறிக்கொள்கிறார்கள்
முத்தம் பற்றி ஏ டூ இசட் வரை க்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வி ல் பல சுவாரஸ்யமான தகவ ல்கள் கிடைத்தன. அவை :
*பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உட னான முத்தங்களை வாழ்க் கையில் ஒரு அங்க மாக கருதுகிறார்கள்.
* தங்களது அன்பையும், மகி ழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்துகொள்கின் றனர்.
* தம்பதிகள் இடை யேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்கு ள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய கார ணம். செல்போனில் நீண்ட நேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இ டையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அ வர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.
*முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில் லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமண த்திற்கு பிறகு, மனைவியே முத்தம்கொடுக்க தேடி வந்தா லும்கூட வேண்டாவெறுப்பா கத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத் தை கருதுகிறார்களாம்.
*ஆண்கள், தங்கள்துணைக்கு முத்தம் கொடுக்கமுன் வந்தா ல், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்கவேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகி ழ்ச்சியான தருணங்களில் அவர் கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலு ம் தவறிவிடுகி றார்களாம்.
* முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே என்று ஒருபுறம் இருக்க இந்த முத்த இன்பத்தை அணு அணுவாய் ரசிப்பதிலும் கொ டுப்பதிலும் பெண்கள்தான் ` டாப்.’
*ஆசை அறுபதுநாள், மோகம் முப்பதுநாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாள டைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக் கிறார்கள். முத்தத்தை புத்துண ர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்குகாரணம்
*தாம்பத்ய உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக்கொள்ள முடியுமாம். ஆனால் , பெண்களால் அதுமுடியா தாம். அவர்கள், முத்தம் கொடுக்கக் கூடா து என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால் கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடு வார்களாம்.
*தாம்பத்யஉறவில், தன் துணை யை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திரு ப்தியான நிறைவை பெறுகிறா ளாம் .
-இப்படி பல்வேறு சுவாரஸ்ய மான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெ ரிக்க ஆய்வு. ஆனால், நம் பெ ண்கள் எப்படிஸ? அவர்களின் ஆழ் மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்