Home சூடான செய்திகள் முத்தம் தரும் சுகம்!!

முத்தம் தரும் சுகம்!!

43

P2_Bangladeshi Sexy Girls (Part-1) (4)*கா*தலர்கள் ரொமான்ஸ் மூடில் உடல் ரீதியாக பகிர்ந்து கொள்வதில் முத்தம் தான் மிக முக்கியமானது. முத்தம் தருவதில் தவறான வழி எதுவும் கிடையாது. சரியான நேரத்தில் தரப்படும் சரியான முத்தத்துக்கு இணையான ரொமான்ஸ் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் முகம் மாறியிருப்பது போல முத்தம் தரும் முறையிலும் மாற்றம் இருக்கும். பல வகையானவர்கள் இருப்பது போல முத்தமும் பல வகையாக உள்ளன. நம்பினால் நம்புங்கள், சிலர் பிரெஞ்சு முறைப்படி அல்லது நாக்கைப் பயன்படுத்தி முத்தமிட அச்சப்படுகின்றனர். ஆனால் வேறு சிலர் நாக்கு பயன்படுத்தி முத்தமிடுவதைத் தவிர வேறு வழியை அறிந்திருக்க மாட்டார்கள். உண்மை நிலை என்னவென்றால், ஒருவருக்கு நீங்கள் அடிக்கடி முத்தம் தந்தால் தான் அவர் எந்த வகையில் முத்தமிடுவதை விரும்புகிறார் என்ற பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னர் அது
உங்களுக்கும் மகிழ்ச்சி தந்து நீங்கள் அந்த முறையையே தொடர்வீர்கள்.
முதல் முத்தம் எப்போதுமே நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போதுதான் தரப்பட வேண்டும். இது அநாவசியமான பதற்றம் மற்றும் சங்கோஜமான சூழ்நிலை உருவாவதைத் தடுக்கும். முத்த வகைகளில் மிகச் சிறந்தது எதுவென்றால், முத்தமிடுவதில் பல ஸ்டைல்களைப் பயன்படுத்துவது தான். அதாவது, இதழ்களை இதழ்களால் மெதுவாக ஸ்பரிசித்து, பின்னர் சுவைத்து, மெதுவாக பிரெஞ்சு முறையைப் பின்பற்றி, முதலில் உங்கள் ஜோடியின் மேல் உதடை, பின்னர் கீழ் உதடை சுவையுங்கள். உதடுகளில் மட்டும் உங்கள் கவனம் இருக்க வேண்டாம். மெல்ல, மிக மெல்ல கன்னங்கள், கழுத்து, கண் இமைகள் என்று பகுதிகளை மாற்றி முத்தத்தைத் தொடருங்கள். வெறும் ரொமான்சுக்கு மட்டுமல்ல வேறு சில சுகங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.
முத்தம் அதன் சிறப்பைப் பெறுவது நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருக்குக் கொடுக்கப்படும் போதுதான். முத்தத்தில் நேசம் மட்டுமின்றி உண்மையும் அடங்கியுள்ளது. உண்மையான நேசத்துடன் தரப்படும் சிறந்த முத்தம் மகிழ்ச்சி தருவது
மட்டுமின்றி அந்த இரு நபர்கள் இடையேயான நெருக்கத்தையும் வலுபடுத்தும்.
வாழ்க்கையில் நுழையும் யாரோ ஒருவருக்கு முத்தம் தர அச்சமாக உள்ளது என்று எங்களுக்குப் பலரும் கடிதம் எழுதுகின்றனர். அவர்களுக்கு எங்களுடைய பதில், புதிய நபருக்கு ஆரம்பத்திலேயே முத்தம் தந்து விட வேண்டாம். முதல் முத்தத்துக்கு முன்னர் அந்த நபருடன் ஜோடியாக உங்கள் நேரத்தை கொஞ்ச காலம் செலவழியுங்கள். இருவரிடையே நெருக்கம் அதிகமான பின்னர், ரொமான்ஸ் சூழலில் முதல் முத்தத்தைத் தாருங்கள்.
*முத்தத்திற்கு சில அடிப்படை குறிப்புகள்*
*சுத்தம் மிக அவசியம்* – இது மிகவும் முக்கியம். உங்கள் ஜோடியுடன் உல்லாசமாக செல்வதற்கு முன் பற்களை பிரஷ் செய்ய மறக்காதீர்கள். வாய் துர்நாற்றம் உங்கள் முத்தத்தை மட்டுமின்றி நெருக்கத்தையும் பாதித்து விடும். முத்தம் தருவதற்கு முன்னர் ஏதாவது சாப்பிட்டு இருந்தால் ஏதாவது மிண்ட் போன்ற நறுமண வஸ்துவை வாயில் சுவையுங்கள். அதற்காக வாயில் சூயிங் கம் போன்று ஏதாவது சவைத்தபடி முத்தம் தர வேண்டாம்.
*ஈர உதடுகள்:* முத்தமிடும்போது உங்கள் உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். வறண்ட உதடுகள் வளமான முத்தம் தராது. நாக்கை பயன்படுத்தி உங்கள் உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக உதட்டுச் சாயம் எதுவும் பூச வேண்டாம். ஈர உதடுகள் இருவருக்குமே சுகமான அனுபவத்தைத் தரும்.
*நெருக்கம்:* முத்தம் தரப்படும்போது இருவரும் நெருங்கி இருக்க வேண்டியது அவசியம். உடல்கள் நெருக்கமாக இருக்கும்போது தலையை சற்று மேல்நோக்கி சாய்த்தபடி முத்தம் தாருங்கள் அல்லது பெறுங்கள். உங்கள் ஜோடி எந்தப் பக்கம் தலையை சாய்த்து வைத்திருக்கிறாரோ அதற்கு எதிர்ப்பக்கமாக நீங்கள் உங்கள் தலையை சாய்த்துக் கொள்ளுங்கள். உங்களால் இது முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஜோடி அவராகவே உங்கள் முகத்தை ஆர்வத்துடன் பிடித்து சாய்த்து முத்த மழை பொழிவார். இந்தச் சூழலில் உதடுகள் ஒன்று சேரும்போது உலகை நீங்கள் மறப்பீர்கள்.