Home பெண்கள் உடல் கட்டுப்பாடு முதுகெலும்பை வலுவடையச் செய்யும் வீரபத்ராசனம் தழுவல்

முதுகெலும்பை வலுவடையச் செய்யும் வீரபத்ராசனம் தழுவல்

20

செய்முறை : விரிப்பில் சமமாக நின்ற நிலையில், ஒரு காலை முன்பக்கமாக வைக்கவும். மற்றொரு காலின் பாதத்தைச் சற்று வெளிப்புறமாகத் திருப்பி, வசதியாக நிற்க வேண்டும். இந்த நிலையிலிருந்து, மூச்சை உள்ளிழுத்தபடியே முன் கால் முட்டியை மடக்கி கைகளைச் சற்று மடக்கி, நெஞ்சுப் பகுதியை விரிக்க வேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி கையை கீழ்ப் பக்கம் கொண்டுவர வேண்டும். முட்டியை நேராக்க வேண்டும். இதேபோல் இடது, வலது என இரு பக்கமும் முறையே ஆறு தடவை செய்ய வேண்டும்.

பலன்கள்: முதுகெலும்பு பின்புறமாக வளைவதால், உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். கீழ் முதுகு நன்றாக வேலை செய்யும். முதுகெலும்பு வலுவடையும். மேல் உடலில் இருக்கும் வலி குறையும். வீரர்களுக்கான ஆசனத் தழுவல் என்பதால், புதுத் தெம்பு கிடைக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்புடன் வேலைசெய்ய உடலைத் தயார்படுத்தும்.