Home பெண்கள் தாய்மை நலம் முதல் முயற்சியிலேயே கர்ப்பமாக நீங்க செய்ய வேண்டியது இது தான் !

முதல் முயற்சியிலேயே கர்ப்பமாக நீங்க செய்ய வேண்டியது இது தான் !

52

கருத்தரிப்பது என்பது திருமண வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வரமாகும். ஆனால் இது அனைவருக்கு இயற்கை முறையிலேயே நடந்துவிடுவதில்லை. சிலருக்கு இது டெஸ்ட் டியூப் பேபி மூலமாகவும் கிடைக்கிறது. இந்த ஐ.வி.எஃப் முறையானது கண்டிப்பாக கொஞ்சம் அதிக விலையுடைய முறை தான். இதில் நீங்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எப்படி முதல் தடவையிலேயே இதனை வெற்றிகரமாக்குவது என்பது பற்றி தான். இந்த ஐ.வி.எஃப் முறையை முதல்முறையிலேயே வெற்றிகரமானதாக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளது?

பொதுவாக இது 40% அளவிற்கு வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் இதன் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்த விரும்பினால் அதற்காக நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். முதலில் நீங்கள் உங்களது உடல் ஆரோக்கியத்தையும், உங்களது மனதையும் இதற்காக தயார்ப்படுத்த வேண்டியது அவசியம். ஐ.வி.எஃப் முறை வெற்றியடைவது என்பது உங்களது ஆரோக்கியத்தை சார்ந்ததாகவே இருக்கும். உங்களது மருத்துவர் கூட இந்த முறை வெற்றியடைய சில அடிப்படை விஷயங்களை சொல்லித் தருவார்.

வயதும் இதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. சிறிய வயது உள்ளவர்களுக்கு கூடுதல் கருமுட்டைகள் தேவைப்படும். ஆனால் கருமுட்டைகளால் வெற்றியை தீர்மானிக்க முடியாது. ஆனால் இது கருவுறுதலில் சில சிக்கல்களை ஏற்ப்படுத்தும். இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பயன்படுத்தி நீங்கள் முதல் முறையிலேயே ஐ.வி.எஃப் முறை மூலம் கருவுறலாம்.

நச்சுக்கள் வெளியேற்றம்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது இதற்கு மிகவும் முக்கியமாகும். உங்களது மருத்துவரை அணுகி நீங்கள் ஒரு குறுகிய கால நச்சுக்களை வெளியேற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இது மூன்று முதல் ஐந்து நாட்களில் முடிந்து விடும். இது தான் முதல் படியாகும்.

டயட்

நீங்கள் குறைந்தது ஐ.வி.எஃப்க்கு 100 நாட்கள் முன்னர் இருந்தாவது ஆரோக்கியமான டயட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உங்களது கருவுறுதலுக்கு பொதுமான இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்க வேண்டியது அவசியம். உங்களது துணையும் கூட விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்காக வேண்டி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

அக்குப்பஞ்சர்

இந்த முறை வெற்றியடைய அக்குப்பஞ்சரும் ஒரு வகையில் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்களுக்கு உள்ள மன அழுத்தத்தை குறைக்கும். மேலும் இது கர்ப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனை நீங்கள் மூன்று முதல் நான்கு மாதங்கள் முன்னரே ஆரம்பித்து விடுவதால் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்தது 20% அதிகரிக்கும். ஆனால் அக்குப்பஞ்சர் முறையை உங்களது மருத்துவரின் அறிவுரையின் பெயரில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். யோகா, மசாஜ் தெரபி போன்றவற்றை கூட நீங்கள் செய்யலாம்.

காதல்

உங்களது படுக்கை அறையில் நீங்கள் உற்ச்சாகமாக செயல்படுங்கள். இது உங்களது மன அழுத்தத்தை ஐ.வி.எஃப் முறைக்கு முன்னர் குறைக்கும். உங்களது உச்சமடைதலானது மூளையில் நல்ல கெமிக்கல்கள் சுரக்க உதவி புரிகிறது. உடலுறவு என்பது ஐ.வி.எஃப்க்கு முந்தைய நாள் வரை நிச்சயமாகும்.

விட்டமின்கள்

உங்களுக்கு விட்டமின் ஏ, சி, பி, இ மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், ஜிங்க் போன்ற மினரல்கள் தேவைப்படுகின்றன. ஃபேட்டி ஆசிட் போலிக் ஆசிட் போன்றவையும் தேவைப்படுகிறது. நீங்கள் உணவுகளாகவும், சத்து மாத்திரைகளாகவும் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.

ஆண்களுக்கு…

உங்களது மனைவியை மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், சூடான நீரில் குளிப்பது, ஆவிக் குளியல் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். இவை எல்லாம் உங்களது விதைப்பைகளை சூடாக்கும். சூடாக இருப்பது என்பது விந்தணுக்களை கொல்லும், அதன் தரத்தையும் குறைக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் உங்களது விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கு விட்டமின் ஏ, பி6, பி12 சி, இ, செலினியம், மெக்னீசியம்,அமீனோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் ஜிங்க் போன்றவை கிடைக்கின்றன.

உடற்பயிற்சி

உங்களது உடற்பயிற்சி உங்களது கர்ப்பத்தை வெற்றிகரமானதாக்க பெரிதும் உதவும். உங்களது பி.எம்.ஐ ஆனது 20 முதல் 23க்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி இரண்டு வழிகளில் உங்களுக்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

தீய பழக்கங்கள்

இது மிகவும் முக்கியமான ஒருமுறையாகும். ஐ.வி.எஃப் முறைக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்னரே நீங்கள் குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற தீய பழக்கங்களை கைவிட வேண்டியது அவசியம்.

கடைசி நாள்

கருத்தரிக்க போகும் அன்று மிதமான சூடுள்ள உணவை சாப்பிடுங்கள். சூப் குடிக்கலாம். தேவையான ஓய்வு தேவைப்படும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

எத்தனை நாட்கள்?

இந்த ஐ.வி.எஃப் கருத்தரிப்பு முறையானது முடிய மூன்று நாட்கள் ஆகும். இது முடிந்ததும் நீங்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் ஓய்வு எடுப்பது அவசியம். உங்களது மருத்துவர் பல விஷங்களை உங்களிடம் கூறுவார். அவற்றை எல்லாம் நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இந்த முறைகளை எல்லாம் நீங்கள் கையாண்டால் உங்களது கர்ப்பம் முதல் முறையிலேயே வெற்றியடைவது உறுதி..!