Home உறவு-காதல் முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது . . . .

முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது . . . .

22

images (7)முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொ ண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முத ல் இரவிலோ முத்தம் கொடுத் திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலி க்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடு க்கும் போது எப்படி நடந்து கொ ள்ளவேண்டும் என்று ஆலோச னை வழங்கியுள்ள னர் நிபுணர்கள். படியுங்களேன்.
பசுமையான சோலை, அடர்ந்த வனப்பகுதி, தனிமையான சூழ் நிலையை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்க அதுதான் ஏற்ற இடம். முதல் முதலாக கொடுக்கப்படும், பெறப்படு ம் முத்தம் சிறப்பு வாய்ந்தது .உங்களின் காதலியோ, மனைவியோ அதை நிச்சய ம் எதிர்பார்ப்பார். முத்தம் கொடுக்க நண்பர்களுடன் குரூப்பாக செல்லும் இடங்க ளில் முத்தம் கொடுக்க முயற் சி செய்ய வேண்டாம். தனியாக இருவரும் செல்லு ம் இடமே ஏற்றது
முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது பதற்றம் ஏற்படுவது இயல்புதான். மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அவசரத்தில் உங்களின் துணை யை காயப்படுத்தி விட வேண் டாம். அப்புறம் முதலே முடிவா கிவிட வாய்ப்புள்ளது. உங்கள் துணை முத்தம் கொடுக்க விரு ம்பினால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்களேன்.
முத்தம் கொடுப்பதற்கு முதலி ல் மூச்சுக்காற்று சுத்தமானதா க, பு துணர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். எனவே துணையு டன் டேட்டிங் என்று முடிவு செய்த உடன் சுவாச புத்துணர்ச் சிக்கு வேண்டியவைகளை தயா ராக செய் துவிட்டு கிளம்புங்கள். புதினா சுவிங்கம் சாப்பிட்டால் மூச்சு புத்துணர்ச்சியோடு இருக் கும்.
தனியாக சந்திக்க இடம் கிடைத் து விட்டதே என்று உடனே தொ டங்கி விட வேண்டாம். கொஞ்ச ம் நேரம் பேசுங்கள். கண்களின் மூலம் சம்மதம் கிடைத்தஉடன் அப்புறம் முத்தமிட தயாராகுங்கள். சரியான உடல்மொழி அவசி யம். கொஞ்சம் நெருங்கினாலும் உங்கள் துணைக்கு நீங்கள் முத்த மிட விரும்புகிறீர்கள் என்பது உணர்த்தி விடும்.
முதல் முத்தம் என்பது மென்மையானதாய் மயிலிறகில் வருடுவ தைப் போல இருக்கவேண்டும். அதற்காக போராட வேண்டாம். இய ல்பாய் இருக்கட்டும் என்கின்றனர் நிபுணர்கள்.