என்று நாம் வாழ்க்கை கற்பிக்கும் பாடத்தை கற்பதை நிறுத்துகிறோமோ அன்றே நாம் இறந்து விடுகிறோம் என உலக அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையும் கூட. நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள், வாழும் மனிதர்கள், நமது உறவுகள் என நமது வாழ்க்கை தான் நமது பாடப் புத்தகமாக விளங்குகிறது. இதில் இருந்து நாம் கற்றுக் கொண்டதை வைத்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, மென்மேலும் தவறு செய்யக் கூடாது. இதில் முக்கியமானது உறவுகள். உறவில் நம்முடன் மிக நெருக்கமான உறவாக அமைவது காதல். அது திருமணத்திற்கு முந்தையதாக இருக்கலாம் அல்லது பின்னே அரும்பிய காதலாக இருக்கலாம். இந்த முதல் காதல் தருணங்கள் நமக்கு நிறையவற்றை கற்றுக் கொடுக்கும். அதில் முக்கியமாக சிலவற்றை பற்றி இனிக் காணலாம்… பாலினம் அறிதல் என்னதான் உடன் பிறந்த சகோதரன், சகோதரி இருப்பினும். மன ரீதியாக, உடல் ரீதியாக ஆண், பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் பற்றி ஓர் நபர் முதன் முதலில் முழுவதுமாக அறிந்துக் கொள்வது முதல் உறவில் தான். அது முதல் காதலாக இருக்கலாம் அல்லது முதல் திருமணமாக இருக்கலாம். அதீத நம்பிக்கை முதல் காதல் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் சிறந்த பாடம் அதீத நம்பிக்கை. ஓர் நபர் மீது அதீத நம்பிக்கை வைப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தரும், வலியை தரும் என்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
வலி எல்லோருடைய பிரிவும் வலி மிகுந்தது தான். ஆனால், காதல் பிரிவு தரும் வலி தான் முதன்மை வகிக்கும். நமது வாழ்க்கையை இவருடன் தான் வாழ போகிறோம் என ஒரு கனவுக் கோட்டை கட்டி அது இடிந்து விழும் போது ஏற்படும் வலி சொல்லில் அடங்காதது. பெண்மை ஓர் ஆண் பெண்மையை முழுவதுமாக உணர்வது முதல் காதலில் தான். உண்மையாக ஓர் பெண்ணை முதன் முதலில் நேசிக்கும் ஒருவனுக்கு உடலை விட மனது தான் சிறந்தது என்பது தெரியவரும். அதன் பிறகு யார் ஒருவனும், அடிடா அவள, ஒதடா அவள என கூக்குரல் இடமாட்டான். கஷ்டம் தீர்வு காதலிப்பவர்கள் பலரும் கூறும் வசனம் “இதவிட பெரிய கஷ்டமா ஒண்ணு இருக்கா பாஸ்”. ஆம், சில நேரங்களில் அதீத அன்பு, அரவணைப்பும் கூட எரிச்சலை ஊட்டும். பெண்கள் இந்த தவறை அதிகம் செய்வதுண்டு. நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்காதே, அங்கு போகாதே, இந்து போகாதே என கூறுவதை ஆண்கள் கஷ்டமாக தான் பார்ப்பார்கள்.