Home பாலியல் முதல்முறை உடலுறவு கொள்ளும்போது எல்லா பெண்களுக்குமே ரத்தக்கசிவு ஏற்படுமா?

முதல்முறை உடலுறவு கொள்ளும்போது எல்லா பெண்களுக்குமே ரத்தக்கசிவு ஏற்படுமா?

50

பெண்களின் கன்னித் தன்மையை முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது ஏற்படும் ரத்த கசிவை வைத்து கண்டறியலாம் என்னும் கருத்து பரவலாக காணப்படும் ஒன்று.

ரத்த கசிவு ஏற்பட்டால் கன்னித் தன்மையோடு இருக்கிறாள் என்றும், ரத்த கசிவு ஏற்படவில்லை என்றால் அவளது கன்னித்தன்மை கேள்விக்குறியாகிறது. ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்பதை முதல்முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது என்பது தான் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். அந்த காலத்தில் பெண்கள் வயதிற்கு வந்தால் அவர்களை வீட்டினுள் முடக்கி வைத்திருப்பார்கள். மிக விரைவிலேயே திருமணம் செய்து விடுவார்கள். அதன்பின் பெண்களால் ஓடவோ, ஆடவோ முடியாது. அதனால் அவர்கள் முதல்முறை உறவில் ஈடுபடும்போது கன்னித்திரை கிழிந்து ரத்தக்கசிவு ஏற்படலாம். அவர்களுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் இக்காலத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று காட்டி வருகிறார்கள். குறிப்பாக விளையாட்டு துறைகளிலும் பெண்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.

பெண்கள் பிறக்கும் போது பிறப்புறுப்பின் நுழைவாயிலில், ஹைமன் எனப்படும் மென்மையான படலம் போன்ற கன்னித்திரை சவ்வு ஒன்று இருக்கும். இந்த கன்னிச்சவ்வானது பெண் முதன்முதலில் உடலுறவு கொள்ளும் போது கிழிந்து, ரத்தக்கசிவு ஏற்படும். இது உடலுறவினால் மட்டும் தான் கிழியும் என்று பொருள் கொள்ள கூடாது.

பெண்களின் கன்னித்தன்மை கன்னிச்சவ்வில் இல்லை. கன்னிச்சவ்வானது சில பெண்களுக்கு சற்று கடினமாகவும், சிலருக்கு மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் இன்னும் சில பெண்கள் இந்த கன்னிச்சவ்வு இல்லாமலேயே பிறப்பார்கள். எனவே ஓர் பெண்ணின் கன்னித்தன்மையை முதல்முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டுபிடிக்க முடியாது. கன்னிச்சவ்வை கொண்டு கன்னித் தன்மையை பரிசோதிப்பது என்பது தவறான ஒன்று.

கன்னிச்சவ்வு என்பது மிகவும் மெல்லிய திசு. இது எளிதில் கிழியக்கூடியது மற்றும் எந்நேரத்தில் வேண்டுமானாலும், இது கிழியலாம். அதிலும் பெண் ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் அல்லது வேறு ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுபவராயின், அவர்களுக்கு கன்னிச்சவ்வு நிச்சயம் உடலுறவுக்கு முன்பாகவே கிழிந்திருக்கும். இதை வைத்து அவர்களை சந்தேகிப்பது தவறு.

பெண்கள் சுய இன்பம் காணுதல் அல்லது மாதவிலக்கு காலத்தில் வலியைக் குறைக்க மாத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணத்தினாலும், கன்னிச்சவ்வு கிழிந்திருக்கும். இதைவைத்தும் அவர்களை தவறாக எண்ணுவது முட்டாள் தனமான ஒன்று.

முதல்முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ இல்லையோ, கட்டாயம் கடுமையான வலியை உணர்வார்கள். இதற்கு அவ்விடத்தில் லூப்ரிக்கேசன் பற்றாக்குறை மட்டுமின்றி, சில பெண்கள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது பயப்படுவார்கள். இப்படி பயமடையும் போது, பிறப்புறுப்பு இறுக்கமடைந்து, லூப்ரிக்கேசன் குறைந்து வலி ஏற்படும்.