Home சூடான செய்திகள் முதலிரவை பாலுடன் தொடங்க காரணம் தெரியுமா?

முதலிரவை பாலுடன் தொடங்க காரணம் தெரியுமா?

36

27-1448609482-2whynewlywedbrideenteringfirstnightbedroomwithaglassofmilkநமது நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்கு, சம்பிரதாயம் என பலவன இருக்கின்றன. இதில் ஒன்று தாம் சாந்தி முகூர்த்தம் என கூறப்படும் முதலிரவு. திருமணம் முடிந்த முதல் நாள் அல்லது, ஓர் நல்ல நாள் பார்த்து தம்பதிகள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை துவக்க இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது.

பால் உடலை சுத்தப்படுத்த உதவும் ஓர் கருவியாக கருதப்பட்டு வருகிறது. இல்லற வாழ்க்கையை தொடங்கும் இடமாக விளங்கும் முதலிரவன்று பால் அருந்தி தொடங்குவதால், அந்த வாழ்க்கை தூய்மையாக துவங்குகிறது என்று கருதி வந்துள்ளனர்.

உடல் அசதியாக இருக்கும் தம்பதிகளின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால்.

இது உடலில் உள்ள சோர்வை போக்கி சுறுசுறுப்பை தரும். மற்றும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் (Trytophan) எனப்படும் அமினோ அமிலம் உடலை இலகுவாக உணர உதவுமாம். இதற்காகவும் கூட பால் அருந்தி வருவது முதலிரவு வழக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

குங்குமப்பூ, மஞ்சள் போன்றவை கலந்து பாலை பருகுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது.

இதனால், தாம்பத்தியம் சிறக்கும் என்பதாலும் முதலிரவில் பால் பருகுவது வழக்கமாக பின்பற்றுப்பட்டுள்ளது.

மேலும் அக்காலத்தில் பாலில் அஸ்வகந்தா கலந்து குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. அபூர்வ இந்திய மூலிகைகளில் ஒன்றான அஸ்வகந்தா உடலுறவு வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது ஆகும்.