Home சூடான செய்திகள் முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும்

முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும்

77

imagesமுதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் “உறவு”க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது. * திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை.