காலை நேர உணவாக முட்டை பணியார செய்து குழந்தைகளுக்கு தரலாம். முட்டையில் வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம். புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் அனைவரும் சாப்பிடலாம். அதை எப்படி செய்வது எனப் பார்த்து சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1/2 கப் ( நறுக்கியது)
கேரட் – 1/4 கப் ( நறுக்கியது)
கொத்தமல்லி தழை – 6
முட்டை – 2
இட்லி மாவு – 1 கப்
கோதுமை மாவு – 2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கொத்தமல்லி தழை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கிய வெங்காயம், கேரட்டைச் சேர்க்கவும். அதில், இட்லி மாவு, கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு இட்லி மாவை கரண்டியால் ஊற்றவும்.
இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் கரண்டியால் எடுத்து சூடாக சாப்பிடலாம்.
முட்டை பணியாரம் ரெடி!