பெண்களைவிட ஆண்கள் தான் முடி உதிர்வதை எண்ணி அதிகமாக வருத்தப்படுகிறார்கள். பார்லருக்குப் போய் தலையையும் பணத்தையும் கொடுத்து இன்னும் கொஞ்சம் பிரச்னையை விலைக்கு வாங்கிக் கொள்வதைவிட, வீட்டிலேயே சில எளிய வழிகளின் மூலம் தலைமுடியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வாரத்துக்கு இரண்டு முறையாவது தலைக்கு ஆலிவ் ஆயில் தடவ வேண்டும். ஆலிவ் ஆயில் தலைமுடி உதிர்தலைத் தடுக்கும்.
ஒரு கப் ஆலிவ் ஆயிலுடன் 1 ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்துத் தலையில் தேய்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து, தரமான ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள்.
கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. முடி உதிரும் பிரச்னைக்கு கற்றாழை நல்ல தீர்வாக அமையும்.
வெங்காயத்தை பேஸ்ட் செய்து தலையில் தடவி அரைமணி நேரம் வரை ஊறவிடவும். வெங்காயம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு செழித்து வளரச் செய்யும்.
மருதாணிப்பவுடரை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பேஸ்ட் செய்து இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தலைக்கு பேக் போட்டு வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, இளநரையையும் தடுக்க முடியும்.
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, தலையை அலசினாலும் தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்.
தேனும் முட்டையும் தலைமுடிக்கு ஊட்டமளிக்கக் கூடியவை. இரண்டையும் கலந்து வாரத்துக்கு ஒரு முறை தேய்த்துக் குளிப்பதன் மூலம் மென்மையான பட்டு போன்ற தலைமுடியைப் பெற முடியும்.