கோடை காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலே முகம் எரிச்சலாகும். அடிக்கடி தண்ணீர் விட்டு கழுவினாலும் எரிச்சல் நீடிக்கும். இதற்கு கிரீம் எதுவும் உபயோகிக்க வேண்டாம் இயற்கையிலேயே வைத்தியம் இருக்கிறது அழகியல் நிபுணர்கள்.
பேரிச்சை, திராட்சை பேக்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்1, உலர்ந்த திராட்சை பழம்10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாகும். எரிச்சல் நீங்கும்.
ஜில் ஜில் பேக்
வேகாத வெயிலில் வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்து எரிச்சலாகும். வீட்டில் இருந்து ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்கா, கொஞ்சம் கொத்துமல்லியை மிக்ஸியில் போட்டு அடித்து சாறெடுத்து முகத்தில் பூசுங்க. ஐஸ்க்ரீம் பேக் போட்டதுமாதிரி முகம் ஜில்லிப்பாகி, கலராகிடும்.
கரும்புள்ளிகள் மறைய
உலர்ந்த பொன் ஆவாரம்பூவை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் ஒரு டீஸ்பூனுடன், கடலை மாவு அரை டீஸ்பூன் கலந்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் இதைச் செய்துவர, 15 நாட்களில் கன்னத்தில் ஏற்பட்ட கருமையும், புள்ளிகளும் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.
வறண்ட சருமத்திற்கு
வறண்ட சருமமாக இருந்தால் கடலைமாவு, தேன், பாலேடு, பன்னீர் மூன்றையும் சேர்த்து 15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும். கடலைமாவு, பாசிபருப்பு, வெயிலில் காய வைத்த ஆரஞ்சுப் பழத்தோல் மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளக்கும்.
பச்சைப்பயறு மாவில் தயிர் கலந்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் பூசுங்கள். கால் மணி நேரம் கழிச்சு வெதுவெதுப் பான தண்ணீரில் முகம் கழுவினால், முகம் பளிங்கு மாதிரி பளபளக்கும்.
முகச்சுருக்கம் மறைய
கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் எண்ணை பிசுபிசுப்பு நீங்கும்.
தேங்காய்ப் பாலை முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும். முக சுருக்கத்தை போக்க விளக்கெண்ணையால் மசாஜ் செய்யவும்.
பொலிவான முகம்
பூசு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் பொலிவான நிறம் பெறலாம். பாலேட்டில் அரிசிமாவு கலந்து தினமும் முகத்தில் தடவி வந்தால் முகம் மெருகேரும். சந்தனம், தேன் இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
முகப்பரு நீங்க
இரவு தூங்கப் போகும் முன், 1 டீஸ்பூன் முல்தானிமட்டி பவுடரை பாலில் கலந்து, கண்ணாடியினால் ஏற்பட்ட தழும்பு பகுதியில் தடவுங்கள். காலையில் முகத்தை கழுவுங்கள். இரண்டே வாரத்தில் கறுப்புத் தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
முகப்பருக்களைக் கட்டுப்படுத்த பன்னீர் உதவும். பன்னீரை முகத்தில் தேய்த்து ஊறவிட்டு கழுவி வந்தால் பருக்களின் அளவு குறையும். வெந்தயம், துளசி இரண்டையும் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.