Home பெண்கள் அழகு குறிப்பு முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்

முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்

40

11203009_404123636440310_336934474771379119_nசிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும்.

• வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

• முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

• பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிப்பது மட்டுமின்றி முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும். இதனை தினமும் செய்யலாம் அல்லது வாரம் 3 முறை செய்யலாம்.

• கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.