Home பெண்கள் அழகு குறிப்பு முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஐஸ் மசாஜ்

முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஐஸ் மசாஜ்

31

Captureசமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம். அதிலும் தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி, மிக்ஸி இருப்பது போன்று ஃப்ரிட்ஜ் இருக்கிறது. இதனால் நிச்சயம் ஐஸ் கட்டியும் இருக்கும். இத்தகைய ஐஸ் கட்டியைக் கொண்டு கூட சரும அழகை அதிகரிக்கலாம்.

அதற்கு ஐஸ்கட்டியைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தின் அழகையும் அதிகரிக்கும். மேலும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால் முதுமை அடைவது தடுக்கப்படும். தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், நிச்சயம் முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.

ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் வைத்து, அதனைக் கொண்டு முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் இந்த மாதிரி காலையில் குளிக்கும் முன்பும் செய்யலாம். முகத்தை சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவும் முன்பும் செய்யலாம் அல்லது இரவில் படுக்கும் முன்பும் செய்யலாம்.

ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், சருமத்துளைகளின் அளவு குறையும். இதனால் முகத்தில் பருக்கள் வருவது குறையும். எனவே உங்களுக்கு பருக்கள் அதிகம் வந்தால், ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள். இதனால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

சிலருக்கு இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்கள் இருக்கும். இது முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இவற்றைத் தடுக்க ஐஸ் கட்டிகளைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இளமையான தோற்றத்தை மீண்டும் பெறலாம். ஆனால் எதையும் அளவுக்கு அதிகமாக செய்ய வேண்டாம்.