மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள் …
மார்பகங்களை பெரிதாக்கச் பயிற்சிகள் பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று . பொதுவான ஆலோசனைகள் : பரம்பரை வாகாக சிறுத்த மார்பகங்களை உடையவர்களுக்கு இதைப் பெரிதாக்குவதென்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். உடற்பயிற்சிகள் மூலம் இவர்கள் ஓரளவு குணம் காணலாம் . கைகளை முன் பின் பக்கமாக முடிந்த அளவுக்கு சுற்றுவது இடது கையால் வலதுகால் கட்டை விரலையும் வலது கையால் இடதுகால் கட்டை விரலையும் தொடுவது , ஸ்கிப்பிங், நீச்சல் போன்ற பயிற்சிகள் மார்பகங்களை பெரிதாக்கச் செய்பவை . பியூட்டி பார்லர்களில் சக்ஷன் மசாஜ் என்று செய்கிறார்கள் . ஒரு வகை மிஷினை மார்பகங்களின் மேல் வைத்தால், மார்பக வடிவிலேயே இருக்கம் அந்தக் கருவி அப்படியே மார்பக சதைகளை மேலே தூக்கி விடும் . தொடர்ந்து இதைச் செய்து வர பலன் தெரியும் . மார்பக வடிவிலேயே இப்போது சிலிக்கான் என்ஹேன்சர்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றை உள்ளாடைகளுக்குள் பொருத்திக் கொண்டால் மார்பகங்கள் நல்ல எடுப்பாகத் தெரியும் . தொட்டால் கூட வித்தியாசம் தெரியாது .கர்ப்பமாக இருக்கும்போதும் தாய்ப்பாலூட்டும் காலத்திலும் பெண்களது மார்பகங்கள் பெரிதாகும். அதற்கேற்ப பெரிய சைஸ் பிராவை அணிய வேண்டும் . படுத்த நிலையில் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் அதிகமாகத் தொய்வடைந்து போகும். நேராக நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே கொடுக்க வேண்டும் . தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக அழகு கெட்டுப் போகாது . அதைத் தவிர்க்கும் பெண்களுக்குத்தான் பின்னாளில் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகமுண்டு. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே பெருத்த மார்பகங்களை சிறியதாக்கும் வழிகள் . கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம் . அதே மாதிரி வெண்ணெய் தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும் மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் . பாதாம் முந்திரி , அக்ரூட், பிஸ்தா பால் போன்றவற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும் . வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து , ஊறிக் குளிக்க வேண்டும் . மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும் . மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம் . மாதுளம் பழத் தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த , தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும். கர்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம். இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும் வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.