Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி?

மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி?

42

10711065_389565551194500_475193664172277695_nஉங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள்.
முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

மேலே உள்ள படத்தில், மஞ்சள் பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்பு நிறத்தில் இருப்பவை ducts என்று சொல்லப்படும் குழாய்கள். நீல நிறத்தில் இருப்பது alveoli என்று சொல்லப்படும் மார்பகச் சுரப்பிகளாகும்.
ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.
ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.
ப்ரோலக்டின் (Prolactin) என்றஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும்.

இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.
உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:
இயற்கையான மூலிகை முறைகள்:
இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து பசை போல உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம்.
மூலிகைப் பட்டியல்:
மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது.
சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது.
டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும்.
இப்போது இணைய தளங்களில் விற்பனையாகும் கிரீம்களில் மேலே சொன்ன மூலிகைகள் தான் உள்ளன. இவற்றில் தாவரங்களில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் உள்ளன.
இந்தமூலிகையில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) உள்ளது. இந்த மூலிகையை இப்போது கிரீம், மாத்திரைகள், ஆயில் என்று பல விதமாக விற்கப்படுகிறது. இவற்றால் ஏதும் பக்க விளைவுகள் உள்ளதா என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூலிகைகளின் பயன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவு போன்றவைக்கேற்ற படி மாறு படும்.
மார்பகத்துக்கான பம்ப்:

மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்:
உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும்.
ப்ளை அப்(Fly up)
· ஒன்றிலிருந்து இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள்.
தண்டால்:
இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும்.