ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டும் வயாகரா மாத்திரைகள் மாரடைப்பை தடுக்கும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னணி விஞ்ஞானி ஆண்ட்ரூ டிராஃபோர்ட், நம்ப முடியாத அற்புதமான கண்டுபிடிப்பு குறித்து ஆய்வு இதழ் வெளியிட்டுள்ளார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 6,000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு வயாகரா மாத்திரை வழங்கி ஆய்வு நடத்தினர். அதில், ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், செக்ஸ் வாழ்க்கையை வலுப்படுத்தவும் உதவுவதாக கூறப்பட்டுள்ளது.
நிரிழிவு நோயாளிகள் தவிர, இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டது. அதில், மற்றவர்களைவிட மாத்திரை எடுத்துக் கொண்டவர்களின் இதயம் சீராக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘வயாகரா’ மாத்திரையில் பி.டி.இ. 5ஐ என்ற முக்கிய வேதிப்பொருள், முக்கிய என்சைம்களை தடுத்து, மிக மெலிதான திசுக்களை விரிவடையாமல் தடுக்கிறது. அதனடிப்படையில் பி.டிஇ. 5 என்சைம் இதயம் விரிவடையாமல் ஒரே அளவில் இருக்க உதவுகிறது. இதுவே மாரடைப்பை தடுக்கிறதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து டிராஃபோர்ட் கூறுகையில்,’வயாகரா’ போன்ற மாத்திரைகள் பொதுவாக விறைப்புத்தன்மை செயலிழப்பது தொடர்பான சிகிச்சைக்கு வழங்கப்படும். இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது என கூறியுள்ளார். மேலும், வயாகரா போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் நோயாளிகளில், மாரடைப்பால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்த விரிவான அறிக்கை பி.எம்.ஜே இதயம் எனும் ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது