Home ஆரோக்கியம் மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலி தாங்க முடியலயா?… இத குடிங்க… வலி பறந்துபோகும்…

மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலி தாங்க முடியலயா?… இத குடிங்க… வலி பறந்துபோகும்…

80

பட்டாம்பூச்சிகளாகச் சுற்றி வரும் பெண்கள் அந்த மூன்று நாட்களில் மட்டும் நெருப்பில் சுட்ட கத்திரிக்காயைப் போல வதங்கிவிடுகிறார்கள். மாதவிலக்கு நாட்களில் முதுகு, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தாங்க முடியாத வலி உண்டாகும். சுருண்டு படுத்துவிடுவார்கள். சில ஜூஸ்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் அந்த நாட்களில் உண்டாகும் வலியைக் குறையும்.

இயற்கையாகவே மாதவிலக்கு கால வலியைப் போக்குவதில், கேரட் மிக சிறப்பாகச் செயல்படும். மாதவிலக்கு நாட்களில் உதிரப்போக்கின் அளவையும் அது வெளியேறும் தன்மையைப் பொருத்துமே இந்த வலியிலும் மாற்றங்கள் தெரியும். கேரட் ஜூஸ் உதிரப்போக்கை சீராக அதிகப்படுத்தும். அதனால் அந்த நாட்களில், ஒரு நாளைக்கு இரண்டு வேளையாவது கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது.

கற்றாழையும் தேனும்

கற்றாழை மிகச் சிறந்த வலி நிவாரணியானச் செயல்படும். அதிலும் கற்றாழையுடன் தேனையும் சேர்த்துக் கலந்து குடிப்பதால், மாதவிலக்கு நாட்களின் போது. உ்ணடாகும் உதிரப்போக்கை சீராக்கும்.

பைனாப்பிள் ஜூஸ்

பைனாப்பிள் பொதுவாகவே தசைகளில் உண்டாகக்கூடிய வலியைப் போக்கும். அதனால் மாதவிலக்கு நாட்களில் பைனப்பிள் ஜூஸை அதிகமாகக் குடிப்பதனால், வயிற்றில் உண்டாகும் தீராத வலியைப் போக்க முடியும்.

பப்பாளி ஜூஸ்

பப்பாளி மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் வலியைப் போக்கக்கூடியது. உதிரப்போக்கு எந்த தடையுமின்றி, சீராக வெளிவர பப்பாளி உதவி புரியும்.

இஞ்சி, புதினா ஜூஸ்

இஞ்சி மிகச்சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படும். இந்த ஜூஸ் எல்லா நாட்களிலுமே அருந்தாலும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

குறிப்பாக, பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சிறிதளவு புதினா மற்றும் இஞ்சியைச் சேர்த்து, ஜூஸாக்கி, ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் வரை குடித்து வந்தால், தன்பின் மாதவிலக்கு வலியெல்லாம் காணாமல் போய், துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.