மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அந்த மூன்று நாட்களும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சில அசௌகரியங்கள் ஏற்படும்.
அந்த மூன்று நாட்களும் வழக்கமான பணிகளைச் செய்வதில் நிறைய அசௌகரியங்கள் உண்டாகின்றன. உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்கள் உண்டாகின்றன.
முந்தைய காலங்களில் இதுபோன்ற நாட்களில் பெண்கள் ஓய்வெடுப்பதற்காகவே தனியாக ஒரு அறை இருக்கும். ஆனால் தற்போது பெண்கள் அந்த மூன்று நாட்களில் வழக்கம் போல வேலையும் செய்துவிட்டு, பணிக்கு அலுவலகமும் செல்ல வேண்டியிருக்கிறது.
மாதவிலக்கு காலங்களில் கர்ப்பப்பை நரம்புகள் தளர்ச்சியடையும் என்பதால் தலைக்கு குளிக்காமல் இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
மாதவிலக்கு சமயங்களில் உடல் சூடு அதிகமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பல சூழல்களில் பெண்கள் இருப்பதால் உடல்சூடு அதிகமாக இருக்கிறது. அதுவுமு் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களுடைய உடலைப் பொறுத்து மாற்றங்கள் நிகழும். அதனால் தலைக்கு குளிப்பதில் தவறு எதுவும் இல்லை.
மாதவிலக்கு நாட்களில் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வதும் பால் குடிப்பது கட்டாயம் செய்ய வேண்டும்.