Home பாலியல் மாதவிலக்கின்போது உண்டாகும் வலிக்கு தீர்வு தான் என்ன?… இதோ இதை முயற்சி செய்துபாருங்க.

மாதவிலக்கின்போது உண்டாகும் வலிக்கு தீர்வு தான் என்ன?… இதோ இதை முயற்சி செய்துபாருங்க.

38

பெண்களுக்கு இருக்கிற மிகப்பெரிய சவால்களில் ஒன்று மாதவிலக்கு உண்டாகும் மூன்று நாட்களைச் சமாளிப்பதுதான்.

சிலர் அந்த வலியைப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வார்கள். சிலரால் தாங்கிக் கொள்ள முடியாமல் வலியில் அழக்கூடத் தொடங்கிவிடுவார்கள். இவற்றிற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், மாதவிலக்கு சீராக இல்லாததும் ஒரு காரணமே. சீரான மாதவிலக்கு வராமல் இருந்தால்கூட, வயிற்றுவலி கடுமையாக இருக்கும்

இதுபோன்ற அந்த மூன்றுநாள் வலியைப் போக்க, கண்ட கண்ட மாத்திரைகளையும் வாங்கிப்போடாமல், சில உணவுப் பழக்கங்களை முறையாகக் கடைபிடித்து வந்தாலே போதும். மற்ற நாட்களைப் போல மாதவிலக்கு நாட்களிலும் மகிழ்ச்சியாக உலா வரலாம்.

வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாதுளம்பழச்சாறு குடித்துவர மாதவிலக்கு ஒழுங்குபெறும். மாதுளையில் கால்சியம், மக்னீசியம் நிறைந்து காணப்படுகின்றன.

செம்பருத்திப் பூவின் மொட்டுக்களை அடிக்கடி வெறும்வாயில் போட்டு மென்று தினறுவந்தால், மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் வலி குணமாகும்.

செவ்வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர மாதவிலக்கு சமயங்களில் உண்டாகும் பிரச்னைகள் தீரும்.

மாதவிலக்கு நேரங்களில் டீ, காபி, குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.

அந்த சமயங்களில் உண்டாகும் வலிக்குத் தீர்வாக, கேழ்வரகு, மீன், முட்டை, வைட்டமின் சி நிறைந்த பழங்கள், கீரைகள், முட்டை ஆகியவை சாப்பிடலாம்.