Home பாலியல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள்!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள்!

34

Menstruationஒவ்வொரு மாதமும் நிகழும் மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். அதில் தாங்க முடியாத வயிற்று வலி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மனதில் ஏற்படும் ஒருவித எரிச்சல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சில விஷயங்களை செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் இருக்கும்.
அதுக்குறித்து மற்றவர்களிடம் கேட்கும் போது, சிலர் செய்யலாம் என்பார்கள், இன்னும் சிலரோ செய்யக்கூடாது என்பார்கள். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெளிவாக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சியைத் தவிர்க்கக்கூடாது
பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. மாதவிடாய் காலத்திலும் மிதமான உடற்பயிற்சியை செய்து வந்தால், வயிற்று வலி மற்றும் இதர உடல் வலிகள் வருவதைத் தடுக்கலாம். மேலும் இத்தனை நாட்கள் உடற்பயிற்சியை செய்து வந்து, இக்காலத்தில் மட்டும் செய்யாமல் இருந்தால், அதன் காரணமாக மிகுந்த சோர்வை உணர்வதோமு, வயிற்று வலியின் அளவு அதிகமாகும் வாய்ப்புள்ளது.

பால் பொருட்கள் வேண்டாம்
கால்சியம் அடிவயிற்றுப் பிடிப்பை சரிசெய்வதாக இருந்தாலும், அனைத்துப் பால் பொருட்களும் உதவாது. மேலும் பால் பொருட்களில் உள்ள அரச்சாடோனிக் அமிலம் வயிற்றுப் பிடிப்பை உண்டாக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் பால் பொருட்கள் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
உணவைத் தவிர்க்காதீர்கள்
மாதவிடாய் காலத்தில் உண்ணும் உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது. இப்படி தவிர்த்தால், வயிற்றில் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, அதனால் வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி மற்றும் பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும்.
பாதுகாப்பில்லா உடலுறவு வேண்டாம்
சிலர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பில்லை என நினைக்கிறார்கள். இன்னும் சிலர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று சொல்கிறார்கள். இவற்றில் எது சரி? நிபுணர்களின் கருத்துப்படி, மாதவிடாய் காலத்தில் சுத்தமில்லாமையால் பாதுகாப்பில்லாத உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று சொல்கிறார்கள். எனவே முடிந்த வரை இக்காலத்தில் உறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்
மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் ஓய்வு என்ற பெயரில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதோடு எதையேனும் சாப்பிட்டவாறே இருப்பார்கள். ஆனால் இப்படி எந்நேரமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், உடல் பருமன் ஏற்படுவதோடு, 7 நாட்களும் மிகுந்த சோர்வை உணரக்கூடும்.
வேக்சிங், த்ரெட்டிங் வேண்டாம்
மாதவிடாய் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருப்பதால், இக்காலத்தில் வேக்சிங், த்ரெட்டிங் செய்தால் கடுமையான வலியை உணரக்கூடும். எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.
மாத்திரைகளைத் தவிர்க்கவும்
இன்றைய காலத்தில் நிறைய பெண்கள் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை எடுக்கிறார்கள். ஆனால் இப்படி மாத்திரைகளை எடுத்தால், அது ஹார்மோன்களை மோசமாக்கி, உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே வயிற்று வலிக்கு மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்த்து, இயற்கை வழிகளை நாடுங்கள்.
உப்புமிக்க உணவுகள்
உப்புமிக்க உணவுகள் உண்பதை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தி அசௌகரியத்தை உண்டாக்கும். இந்த விஷயம் மாதவிடாய் காலத்தில் மட்டுமின்றி, மற்ற காலங்களுக்கும் பொருந்தும். இப்படி பின்பற்றினால் இரத்த அழுத்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.