Home பாலியல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைப்பதற்கான ஆற்றல்மிக்க 6 வழிகள்!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைப்பதற்கான ஆற்றல்மிக்க 6 வழிகள்!

25

28-1406523054-10menstruationமாதவிடாயின் போது ஏற்படும் வலி பெண்களிடையே சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒரு பிரச்சனையாகும். அதனால் இதனை சரிசெய்ய ஏராளமான மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இந்த மருந்துகள் பெண்களின் உடல்நலம் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பக்க விளைவுகளுடன் கூடியவையாகும். இந்த பிரச்சனையை நிவர்த்திக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற இயற்கையான வழிமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் கூறவிருக்கிறோம். இந்த வழிமுறைகள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பதோடல்லாமல், அச்சமயத்தில் உண்டாகக்கூடிய இதர பல பிரச்சனைகளையும் நிவர்த்திக்கக்கூடியவையாகும். மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்…?

இவ்வழிமுறைகள் மாதவிடாயபிரச்சனைகளுக்கான மருந்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள உங்களுக்கு உதவக்கூடியவையாகும். இம்மருந்துகளில் உபயோகிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய, விலை அதிகமல்லாத பொருட்கள் என்பது இவற்றின் கூடுதல் நன்மையாகும். இஞ்சி ஒரு டம்ளர் தண்ணீரில் 29 கிராம் இஞ்சியை கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு பாதியாக குறைந்த பின், அதனை வடிகட்டவும். இவ்வாறு வடிகட்டிய தண்ணீரை தினமும் இருவேளை பருகவும். இந்த நிவாரண வழிமுறையை மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தொடங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து இந்த வழிமுறையை பின்பற்றினால், கட்டாயம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். மாதவிடாயின் போது, வழக்கத்தை விட அதிகமான அளவிலான இஞ்சியை சேர்த்து தயாரித்த டீயை மாதவிடாயினால் அவஸ்தைப்படும் பெண்ணுக்கு கொடுக்கலாம். இது மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க உதவும். கடுகு கடுகை தண்ணீரில் கொதிக்க விடவும். இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு பருத்தித் துணியை நனைத்து, லேசாக பிழிந்த பின், அதனை மாதவிடாயினால் அவதிப்படும் பெண்ணின் வயிற்றின் மீது வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அப்பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இந்த வழிமுறை மாதவிடாய் காலங்களின் போது ஏற்படக்கூடிய வலியை நிறுத்துவதற்கு பெரிதும் உதவும். ஓமம் ஓமத்தை பொடி செய்து, அதில் அரை டேபிள் ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் இருவேளை (காலை மற்றும் மாலை வேளைகளில்) பருகி வரலாம். மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். வெந்தயம் மாதவிடாயின் போது வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்தண்ணீரை தினமும் இரு வேளை அருந்தலாம். இது உங்களுக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். கருஞ்சீரகம் அரை டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க விடவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப்பாக குறையும் வரை தொடர்ந்து கொதிக்க விடவும். பின் இத்தண்ணீரை வடிகட்டி தினமும் ஒருவேளை பருகி வரவும். இவ்வாறு செய்வது மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க பெரிதும் உதவும். பெருங்காயம் நெய்யில் பெருங்காயத்தை வறுக்கவும். அதனை அரை டம்ளர் பாலில், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலக்கவும். சுமார் ஒரு மாதம் வரையில் தினமும் மூன்று வேளை இவ்வாறு பருகி வரவும்.