கேரட்டில் உள்ள வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கராட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கேரட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம்.மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது.நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் ஜீரணத்திற்கு உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும்.ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது.வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வரமால் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கலாம்.
கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறுது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும்.
உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகும். எலும்புகள் உறுதியாகும்.முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும்.தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.
கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.சருமத்திற்கு பொலிவையும், தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது. கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக் கண் போன்றவற்றை குணமாக்கும்.
கேரட்டின் மேல் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அல்லது திருகி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.கேரட் சாறுடன் பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும்.
மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும். தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தலாம்.
ரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் மூட்டுவீக்கம், வாத நோய்கள் தீரும்.மலட்டுத் தன்மையை மாற்றும் வைட்டமின் நிறைந்து காணப்படுகிறது.கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.
கேரட் ஜூஸ் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸை குடிக்க வேண்டும்.
கேரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்டுவதாகவும், நீர் இளக்கியாகவும் செயல்படும் தன்மை கொண்டது. வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லைகளுக்கும் மருத்துவ ரீதியான பலன்களைத் தந்து உதவுகிறது. இருமலைப் போக்கும்.
இதை மிக அதிகமாகத் தின்றால் பித்தமாகும்.நீண்டகாலமாக அல்சர் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டதால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணமடையும்.
மறுபடியும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்துவிடும்.றீ கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்.
ஜுஸ் எடுப்பது எப்படி?
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம்.