மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவுக்கு உட்படுத்துவது குற்றமல்ல என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தொண்டு நிறுவனம் திருமணத்துக்கு பிறகு கட்டாய பாலியல் உறவு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது.
அதில் மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவுக்கு உட்படுத்துவதை வெளிநாடுகளில் குற்றமாக கருதுவதைப்போல இந்தியாவில் குற்றமாக கருத முடியாது.
இந்தியாவில் நிலவும் வறுமை, படிப்பறிவின்மை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் பதில் மனு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.