Home பாலியல் மதுவுக்கு அடிமையாகி பாலியல் பலிகடாவாகும் இளம் பெண்கள் தொடரும் அவலம் !!

மதுவுக்கு அடிமையாகி பாலியல் பலிகடாவாகும் இளம் பெண்கள் தொடரும் அவலம் !!

35

drinking5ஆண்களுக்கு சமமாக எல்லா உரிமைகளும் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், மது அருந்துவதிலும் சம உரிமை பாராட்டினால் எங்கே போகும் இந்தப்பாதை? சமுதாயத்தை சீர்திருத்த வேண்டிய பெண்களும் ஆண்களுடன் சேர்ந்து குடித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நவநாகரீகத்தில் திளைத்து வரும் இன்றைய இளம் பெண்களின் லேட்டஸ்ட் அடையாளம் மது அருந்துவது. எந்தவித சங்கோஜமும் இல்லாமல் பலர் மத்தியில் நின்று மது அருந்துவதை நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதுகிறார்கள்.
பல பணக்கார பார்ட்டிகள் திருமண விழாக்கள், திரைப்பட விழாக்களில் எல்லாம் பெண்கள் மது அருந்துவது சகஜமாகி விட்டது. மது எப்போதும் யாருக்குமே நன்மை செய்ததில்லை. மது என்றவுடன் சீரழிந்த ஆண்கள் மட்டுமே நம் கண்முன் வந்து நிற்கிறார்கள்.
அந்த வரிசையில் இன்று மெல்ல மெல்ல பெண்களும் இடம் பிடித்து வருகிறார்கள் என்பது கொடுமை. பெண்கள் தெய்வமாக மதிக்கும் நாடு நம் நாடு. இதில் பெண்களுக்கென்று சில நற்பண்புகள் உண்டு. அற்பத்தனமான மகிழ்ச்சிக்கு அடிமையாகும் பெண்கள் அழகான வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
பணக்கார பெண்கள், வேதனை, மன உளைச்சலில் குடித்துவிட்டு வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களில் மது அருந்தும் பெண்களைப் பற்றி எடுத்த சர்வேயில் 17 முதல் 19 வயதுடைய பெண்கள் தான் மதுவால் அதிகமாய் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது அருந்திய மயக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் ஒரு தவறான விஷயமாகவே படாது. அப்படியேபட்டாலும் அந்த நேரத்தில் அவர்களால் எந்தவித எதிர்ப்பையும் காட்ட முடியாது.
இதனால் ஏற்படும் பேராபத்துகள் அவர்கள் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்து விடக்கூடும். 21 வயதுக்குட்பட்டவர்கள் குடிக்கக்கூடாது என்று சட்டம் இருந்தும் அதை யார் மதிக்கிறார்கள்?