Home பாலியல் மதுப்பழக்கத்தால் மலட்டுத்தன்மைக்கு தள்ளப்படும் ஆண்கள்!

மதுப்பழக்கத்தால் மலட்டுத்தன்மைக்கு தள்ளப்படும் ஆண்கள்!

35

couples-615x346பல்வேறு போதை பொருள்களுக்கு அடிமையானவர்களா?
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில எச்சரிக்கை தகவல்கள்!

இதோ! உங்களுக்காக!!

1. நீங்கள் குடிக்கும் மதுவால் சிற்றின்பம் கிடைக்கலாம். ஆனால், ஒரு ஆண் மகனாக நடந்துக்கொள்ள முடியாது என்றால் அந்த மது தேவையா? சிந்தித்துப் பாருங்கள்.

2. அதிக மதுவால் கல்லீரலின் இயக்கத்தையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைத்து, பெண்களின் ஹார்மோன் என அழைக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் அளவை இரத்தத்தில் அதிகப்படுத்துகிறது. அதன் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கை அளவையும் குறைத்து ஆண்மைத்தன்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள். இந்த நிலைத்தேவையா? சிந்தித்துப்பாருங்கள்.

3. அளவுக்கதிகமான போதை மருத்துக்களை பயன்படுத்துவதால் விந்தணுக்கள் முறையாக வளர முடியாது. சரியான வளர்ச்சி இல்லாத விந்தணுவால், எந்த பயனும் இல்லை. இது தவிர, விரைகளின் இயக்கத்தையும், ஹார்மோன்களின் கட்டுப்பாட்டையும் சிதைத்து விடுகிறது. அதன் காரணமாக ஆண்குறியின் விரைக்கும் தன்மை குறைந்து ஆண்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

விந்தணுக்களின் உற்பத்திக் குறைவு காரணமாக ஆண்மை இழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து குடி பழக்கம், போதை மருந்துகளின் ஈடுபடுவதால் குழந்தைபேறு என்பது வெறும் கானல் நீராகி விடும். குழந்தைபேறு இல்லாத ஒரு வாழ்க்கை என்பது நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே இனிவரும் காலங்களில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தி வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறி வாழுங்கள். அது உங்கள் வாழ்க்கையை நிச்சயம் அர்த்தமாக்கும்.

உங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கிக்கொள்ள இன்றே முடிவெடுங்கள். இனி மது, போதைப்பழக்கத்தில் ஈடுபடமாட்டேன் என்ற நல்ல முடிவுகளால் நிச்சயம் நன்மை கிடைக்கும். உடனே செயல்படுத்துங்கள். செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்….