எனது பெயர் ………, வயது 27 தற்போது வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவள் எனது சொந்த நாட்டில் இருக்கிறாள். அதனால் எங்களது தொடர்பு தொலைபேசி மூலமும் இணைய மூலமும் தொடர்பு கொண்டு வருகிறோம். நாங்கள் இருவரும் நன்றாக வெளிப்படையாக பேசுவோம், பாலியல் சம்பந்தமான நிறைய விசயங்களை பேசிகொள்வோம், இப்படி உணர்ச்சி வசமாக பேசும் வேளையில் எனது ஆண் உறுப்பு மூலம் மதன நீர் வருவதை உணர முடிகிறது, நாங்கள் ஒரு நாளைக்கு 3 தடவை பேசுவோம், பேசும் போது மட்டும் இந்த மதன நீர் வருகிறது, மேலும் கூடுதலாக மதன நீர் வரும் போது லேசாக எனது ஆண் உறுப்பு நோவை உணர்கிறது. எனது சந்தேகம் எதுவென்றால்… இது தொடர்ந்து நீடிக்குமானால் (மதன நீர் வடிகிறது) எதிர் காலத்தில் எனக்கு ஏதும் பாலியல் குறைபாடுகள் வருமா? எனது உடம்புக்கு ஏதும் பாதிப்புகள் வருமா? தயவு செய்து இந்த கே ! ்வ க்கு பதில் தருமாறு பணிவாய் வேண்டுகிறேன், இந்த பதில் எனக்கும் என்னை போன்ற வாலிபர்களுக்கு ஒரு பயனுள்ளதாய் அமையும் என்று நம்புகிறேன்.
நன்றி
பதில் –
நண்பரே உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது இது ஒரு பொதுவான நிகழ்வு ஆபாசமான செய்தியை செவி மடுக்கும் போது அல்லது பார்க்க நேரிடும் போது மதன நீர் கசிய ஆரம்பிக்கும் இது ஆண்களுக்கு மட்டும் அன்று பெண்களுக்கும் பொருந்தும் இதனால் உடலுங்கு எந்த தீங்கும் ஏற்படாது. இதனால் பாலியல் குறைபாடு ஒன்றும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதிக நேரம் ஆபாசமா உரையாடுவதனால் உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டு அதனை தணிக்காமல் விடுவதனால் விதை பகுதியில் சிறிய நோவு போன்ற உணர்வு ஏற்டுகிறது. இதனை தவிர்ப்பதற்கு சுயஇன்பத்தினை பலர் மேற்கொள்ளுகின்றனர். பெண்களுக்கு கூட அடி வயிற்றில் நோவு போன்ற உணர்வு ஏற்படலாம். எல்லோருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. மதனநீர் கசிவின் பின் உறுப்பை சுத்தமாக வைத்திருக்கவும். அது தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
கேள்வி –
நான் தொடராக உங்கள் ஆக்கங்களை வாசித்து வருகின்றேன். தற்பொழுது என்னுடைய வயது 26. என்னுடைய பிரச்சினை என்னவென்றால் எனக்கு விரைவாக விந்து வெளியேற்றம் உள்ளது. என்னுடைய மனைவியுடன் உறவு கொள்ளும்போது 30 – 45 வினாடிக்குள் எனக்கு விந்து வெளியேற்றம் ஏற்பட்டு விடுகின்றது. ஆகையால் என்னுடைய மனைவிக்கு பூரண சுகத்தை வழங்க முடியவில்லை. மிகவும் விரைவாக விந்து வெளியேறுவதால் என்னுடைய மனைவிக்கு பூரண சுகம் கிடைக்காமல் போகின்றதை என்னால் அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் எனக்கு விந்து வெளியேற்றம் ஏற்பட்ட பிறகு மனைவி அவளுடைய விரல்களினால் கிளிட்டோரிசை தடவி சுகம் அனுபவிக்கிறாள். மேலும் அவளுக்கு பூரண சுகம் வருவதுக்கு 5 – 6 நிமிடங்கள் தேவைப்படுவதை அவள் கிளிட்டோரிசைத் தடவுவதன் மூலம் என்னால் உணர முடிகின்றது. என்னுடைய வயதிலிருந்தே சுய இன்பம் காணும் பழக்கம் என்னிடம் இருந்தது. ஆன! ால தற்பொழுது இல்லை. மேலும் சுமாராக ஒரு வருடம் நான் ஒழுங்கான முறையில் சத்துள்ள உணவு உண்ணவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்கு தருகிறேன். இதைத் தவிர முகப் பருவிட்காக நான் இரண்டு வருடத்திற்கும் மேலாக Tetracycline, Doxyn மருந்து உட்கொண்டு வந்துள்ளேன். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக சில காலங்கள் மிகவும் மன உளைச்சலிலும் வாழ்ந்துள்ளேன். என்னுடைய மனைவி என் மீது உயிரையே வைத்திருக்கின்றாள். ஆகையால் அவளுக்கு என்னால் பூரண சுகத்தை வழங்க முடியவில்லை என்ற மனவருத்தத்தில் உள்ளேன். என் மனைவிக்கு நான் மிகவும் ஏமாற்றத்தை வழங்குவதாக தினமும் நினைத்து ஏங்குகின்றேன். தயவு செய்து எனக்கு ஒரு சிறந்த தீர்வைத் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். உங்களை நேரடியாக சந்தித்து ஆலோசனைகள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தால் என்னுடைய email முகவரிக்கு அறியத் தரவும். நான் Colombo, Sri Lanka வசிக்கின்றேன். உங்க ! ிட ம் இருந்து விரைவான பதிலை எதிர் பார்க்கின்றேன்.
நன்றிகள்
பதில் –
உங்கள் பிரச்சினை எனக்கு புரிகிறது. உலகின் 1/3 பங்கு ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறும் (Premature ejaculation) பிரச்சினை உள்ளது. உடலுறவு கொள்ளும்போது 2 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறினால் அது விரைவான விந்து வெளியேற்றம் ஆகும். மனிதில் உடலுறவு பற்றிய பயம், நம்பிக்கையின்மை,மன மற்றும் உடல் உளைச்சல் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து உடலுறவில் மீது நம்பிக்கை கொள்வதன் மூலம் இதனை சரிபடுத்தலாம். மற்றும் உங்கள் துணையுடன் உடலுறவு பற்றி வெளிப்படையாக கலந்துரையாடுவது நல்லது. நீங்கள் உங்கள் மனைவியை திருப்தி படுத்துவதற்கு முன்விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடுங்கள்.
உறவுகொள்ளும் பொழுது விந்து வருவது போன்று உணா்வு ஏற்பட்டால் சிறிது நேரம் நிறுத்தி பின்பு மீண்டும் தொடருங்கள். ஆயினும் இதற்கு முழு காரணமும் மன உளைச்சல் மூலமே ஏற்படுகிறது. வேலை பளு, குடும்ப பிரச்சினை, உறவில் வெறுப்பு இப்படி பல காரணங்கள் உண்டு நீங்கள் மனதினை இலகுவாக வைத்திருப்பதாலேயே இதனை சரி செய்ய முடியும் இதற்கு உங்கள் மனை ஒத்துளைப்பு மிகவு அவசியம்.. இவற்றின் மூலமும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் வைத்தியரை அணுகலாம்.
நன்றி