ஓட்டல்களுக்குச் சென்றால் நான் விரும்பிச் சாப்பிடும் சிக்கன் வெரைட்டி, இனிப்பும் காரமும் குடைமிளகாய் வாசமும், சுவையும் கலந்த
இந்த சிக்கன் மஞ்சுரியன் தான்…
ஒரு நாளாவது அதை வீட்டிலேயே செய்துசாப்பிட வே ண்டும் என்ற நீண்டநாள் ஆசை இப்போதுதான் நிறை வேறியது… ‘’ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய க ம்’’ என்று வாழ்வோரல்லவா நாம்!!! அதனால்தான் இந்தப்பதிவு…!
தேவையானவை…
போன்லெஸ் சிக்கன் – ½ கிலோ
குடை மிளகாய்– 2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
பெரிய வெங்காயம்–2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கே ற்ப)
தக்காளி சாஸ் – 2 அல்லது 3 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
பூண்டு (உரித்தது) – ஒரு கையளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மைதா மாவு – ஒரு கையளவு
சோள மாவு – ஒரு கையளவு
முட்டை – 2
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கேசரி பவுடர் – ½ ஸ்பூன்
எண்ணெய் – 250 ML
செய்முறை
சரி… தேவையான பொருள்களை சேர்த்தாகிவிட்டது… இப்போது சிக்கன் மஞ்சுரியனை சமைக்கத் தொடங்க லாம்…
முதலில் சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட போன் லெஸ் சிக்கனை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிசைந்து நன்றாக கழுவிக்கொள்ளலாம். (மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் எப்போது அசைவம் செய்தாலும் அதைக்கழுவும்போதே மஞ்சள் தூள் போ ட்டு பிசைந்து கழுவுவது ஆரோக்கியமான ஒன்று…)
உரித்த பூண்டை மெல்லிய சிலைஸ் சிலைஸாக வெட் டிக்கொள்ளலாம். சிக்கன் மஞ்சுரியனுக்கு வெங்காயத் தை யும் குடை மிளகாயையும் வெட்டும் முறை மிக முக்கியமானது. வெங்காயத்தை ஒவ்வொரு லேயராக உரித்து சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டிக் கொ ள்ளலாம். குடை மிளகாயையும் அவ்வாறே… பச்சை மிளகாயை உங்களுக்கு விருப்பமான விதத்தில் வெட் டிக்கொள்ளலாம்.
ஒருகிண்ணத்தில் ஒரு கையளவு சோள மாவையும், ஒரு கையளவு மைதா மாவையும் கொட்டி அதில் சிறி தளவு உப்பும், கேசரி பவுடரும் சேர்த்து அதன் மீது இர ண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற் றி பிசைந்து கொள்ளவேண்டும்.
இப்படிப்பிசைந்த கலவையுடன் இப்போது சிக்கன் துண்டுகளையும் போட்டு பிசைந்து கொள்ளலாம்.
இப்படிப்பிசைந்த சிக்கன் துண்டுகளை ஒரு வாணலி யில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்…
அதன்பிறகு ஒரு ஃப்ரை பேனிலோ இல்லை கடாயி லோ சிக்கனைப்பொறித்த எண்ணையையே ஒரு குழி க்கரண்டி விட்டு எண்ணைய் சூடானவுடன் முதலில் நறுக்கிய பூண்டுகளை போட்டு வதக்கவும். பூண்டு சிறி து வதங்கியதும் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்துண்டுகளையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அடுத்து அதனுடன் நறுக்கிய குடை மிளகாயை போட்டு வதக்கவும்.
இப்போது இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, அரை ஸ்பூன் கேசரி பவுடர் ஆகியவற்றைப் போ ட்டு வதக்கவேண்டும். இது சிறிதளவு வெந்தவுடன் இதி ல் ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கவும். அடுத்து இதில் ஒரு கப் தயிர் விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் விட்டு வதக்கவும்.
தயிர் இந்த வதங்கலில் நன்றாகக்கலந்து கரைந்ததும் ஏற்கனவே பொறித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை இதில் கொட்டி நன்றாக வதக்கவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வெந்தவுடன் மீண்டு ம் ஒருமுறை ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கி இறக்கிவிட்டால் சிக்கன் மஞ்சுரியன் ரெடி… (தேவைப்பட்டால் வெங்காயம் மற்றும் குடைமிளகா யை வதக்கும்போதே சோயா சாஸ்ம், சிறிது வினிகரு ம் சேர்த்து வதக்கலாம். இல்லையென்றாலும் பரவாயி ல்லை.)
அடுத்து?… அடுத்து என்ன சுவையான சிக்கன் மஞ்சுரி யனை உங்களுக்கு விருப்பமான விதத்தில் ஒரு வெட்டு வெட்டவேண்டியதுதான்…!!!