அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி ஆனால் தாம்பத்யத்திற்கு அதில் விதிவிலக்கு என்பது போல கூறி வருகின்றனர் செக்ஸாலஜிஸ்ட்கள். மனமொத்த தம்பதிகள் ரெகுலராக கொள்ளும் உறவின் மூலம் உடல்கட்டுக்கோப்பாகும், ஆரோக்கியமாகும், மனம் மகிழ்ச்சியாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான உறவிற்கான வழிமுறை உங்களின் சமையலறையில் இருந்தே தொடங்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தினந்தோறும் உறவு கொள்ளும் தம்பதியர்கள் தமது உறவின் மூலம் உற்சாகமடைவதோடு மிகவும் இளமையாகவும் உணர்கின்றனராம். இது அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உணவை உண்பதை விட சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்துள்ளனர் வல்லுநர்கள்.
சத்தான உணவு
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகள் அவசியம். அவை ஹார்மோன்களின் சுரப்பை சரிவிகிதமாக சுரக்கச் செய்கின்றன. அதே சமயம் ரெகுலரான தாம்பத்திய உறவின் மூலம் உடலின் அனைத்து ஹார்மோன்களையும் உற்சாகமடையச் செய்யலாம் என்கின்றனர் வல்லுநர்கள். உற்சாகமான தாம்பத்திய உறவிற்கு மூன்று வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர்.
மூளைக்கு உற்சாகமூட்டுங்கள்
மூளைதான் மனித உடலில் செக்ஸ் உணர்வை தூண்டும் மிகச் சிறந்த உறுப்பு. சுறுசுறுப்பாக இருக்கும் மூளையில்தான் எண்ணங்களும், கற்பனைகளும் ஊற்றெடுக்கும். மூளையும் சுரக்கும் ரசாயன தூண்டுதலே எண்ணற்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. எனவே மூளையின் செயல்பாட்டிற்கு சத்தான உணவு அவசியம். எனவே சத்தான உணவு உண்டால் சந்தோசமான உறவை தொடங்கலாம்
சரிவிகித ஹார்மோன் சுரப்பு
உற்சாகமான தாம்பத்ய உறவுக்கு ஹார்மோன்களின் சுரப்பு அவசியம் ஏனெனில் உடலின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், டெஸ்ரோஜென் எனப்படும் ஹார்மோன்களே உறவின் தலைவிதியை நிர்ணயம் செய்பவை. எனவே உடலில் ஹார்மோன் சுரப்பை சரிசமமாக்க நல்ல கொழுப்பு சத்து தரும் உணவுகள், மீன், முட்டை ஆகியவற்றை தவறாமல் உண்ணவேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் பாருங்கள், உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும்.
அதிகரிக்கும் சக்தி
ஆரோக்கியமான தாம்பத்திய உறவு நமது உடலுக்குத் தேவையான சக்தியை, உற்சாகத்தை அளிக்கிறது. பலத்துடன், ஆரோக்கியமான உணர்வையும் நமக்கு அளிக்கிறது. நாம் உண்ணும் உணவானது நமது ஹெச்.ஜி.ஹெச் எனப்படும் Human Growth Hormone (HGH) சுரப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் தொடர் உறவிற்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. எனவே ரசாயன கலப்பில்லாத உணவுகள், மாமிசம், சிக்கன் போன்றவைகளை உண்ணவேண்டும் என்பது செக்ஸாலஜிஸ்ட்களின் அறிவுரை.