Home உறவு-காதல் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு….!

மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு….!

31

marriageதிருமணம் செய்துகொள்ளும் முன்னர் ஆண், பெண் இருவருக்குமே சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அவசியம்
என்பதும், இதனால் பிற்காலத்தில் எழும் தேவையற்ற பிரச்சனைகளை முன்கூட்டியே தடுத்துவிடலாம் என்கிற கருத்தும் தற்போது பரவலாக ஏற்பட்டு வருகிறது.
இது சரியா? என்கிற கேள்வியும், திருமண வயதில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள நினைக்கிற மேலும் பல சந்தேகங்கள் தொடர்பான விளக்கங்களும்…
உறவு முறைகளில் திருமணம் செய்துகொண்டால் குழந்தை பிறப்பு மற்றும் பிறக்கும் குழந்தைக்கு என்னென்ன குறைபாடுகள் ஏற்படும்? எதனால் அப்படி ஏற்படுகிறது?”
உறவு முறைகளில் திருமணம் செய்துகொண்டால், ஒரே விதமான உயிர் அணுக்கள் (identical genetic materials) தம்பதியினரிடையே சேர்கிறது. இதனால் இதய நோய், மூளை வளர்ச்சி குறைபாடு, முகம், உதடு மற்றும் தாடைகளில் முழு வளர்ச்சி ஏற்படாத குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆண்மைக் குறைவு மற்றும் ஆண் மலட்டுத் தன்மையை திருமணத்திற்கு முன் எப்படித் தெரிந்துக்கொள்வது?
தற்போது 50% ஆண்கள் ஆண்மைக் குறைவு மற்றும் மலட்டுத் தன்மையுடன் விளங்குகிறார்கள். புகை பிடித்தல், மது அருந்துதல், போதை வஸ்துகளை உபயோகப்படுத்தல், வெப்ப சூழ்நிலையில் அதிக நேரம் வேலை செய்வது, தினமும் வெகுதூரம் சைக்கிளில் பயணம் செய்வது, புட்டாலமை (mumps) போன்றவற்றால் இது ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்பே ஆண்கள் மருத்துவரை அணுகி, தங்களின் விந்துவை பரிசோதனை செய்துகொண்டால், தங்களுக்கு அந்த பாதிப்பு இருக்கிறதா என்பதையும், அதை எப்படி நிவர்த்தி செய்துகொள்வது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
பெண் மலட்டுத் தன்மை மற்றும் கருப்பையில் உள்ள குறைபாடுகளை பற்றி அறிந்து கொள்ள மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது?
கரு முட்டையில் நீர்க் கட்டிகள், ரத்தக் கட்டிகள், கொழுப்புக் கட்டி போன்றவைகள் இருந்தால் பெண் மலட்டுத் தன்மை ஏற்படும். மேலும், கருப்பை முழு வளர்ச்சி அடையாமல் இருந்தாலும் இந்த பிரச்சினை தோன்றும். இவற்றை திருமணத்திற்கு முன்பே மருத்துவரை அணுகி ஸ்கான் மற்றும் தகுந்த பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது. ஒருவேளை ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை சரிசெய்துகொண்டு திருமணத்தை எதிர்நோக்கலாம்.
எந்தெந்த இரத்தப் பிரிவுகளில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம், செய்துகொள்ளக்கூடாது?
அந்த மாதிரி எந்த நிபந்தனையும இல்லை. ஆனால், நெகட்டிவ் ரத்த பிரிவு உள்ள பெண்ணும், பொசிட்டிவ் ரத்த பிரிவு உள்ள ஆணும் திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் இரத்தப்பிரிவு பொசிட்டிவாக இருக்கும் பட்சத்தில், அக் குழந்தைக்கு மஞ்சட்காமாலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இதற்கு மருந்துகள் உள்ளன.
இரத்தத்தில் ஆன்டிபாடி, ஆன்டிஜென் பிரிவுகள் என்றால் என்ன? இதற்கும் தாம்பத்தியத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
நம் உடலில் எந்தவிதமான கிருமிகள், அணுக்கள் உள்ளே நுழைகிறதோ அது ஆன்டிஜென் எனப்படுகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்காக சுரப்பதை ஆன்டிபாடி என்கிறோம். தாம்பத்தியத்தில் விந்து அணுக்களுக்கு எதிராக ஒரு பெண்ணின் ஆன்டிபாடி சுரக்கும். இதையே மருத்துவத்தில் Antisperm Antibodies என்பர். இதுவே குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
அறிவுத் திறமை அதிகமுள்ள, புத்திசாலியான, சுறுசுறுப்பான, ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்வதற்கு திருமணத்திற்கு முன்னர் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருந்துகள், சிகிச்சை முறைகள் உள்ளனவா? அதைப் பெறுவதற்கு எந்தமாதிரியான திருமணம் செய்துகொண்டால் நல்லது?
இதற்கு திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் மருத்துவரை அணுகி Preconceptional counselling மேற்கொள்ள வேண்டும். நல்ல உடற்பயிற்சி, மனதில் தூய்மை, சரியான உணவு முறை இருத்தல் அவசியம். சொந்தத்தில் திருமணத்தைத் தவிர்த்தல் நல்லது.
தேக குறைபாடு உள்ள குழந்தைகள் எதனால் பிறக்கின்றன? அதைத் தடுக்க தம்பதியினர் என்ன செய்யவேண்டும்?
Folic Acid Deficiency உள்ள பெண்களுக்கு இப்படி குழந்தைகள் பிறக்கின்றன. இதைத் தடுக்க பெண்கள் Folic Acid 5mg மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையோடு 3 மாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்?
ஆணைவிட பெண் 3லிருந்து 5 ஆண்டுகள் குறைந்த வயதுடையவளாக இருத்தல் நலம்.
அதிக வயது வித்தியாசம் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் ஏதேனும் உண்டோ?
மாற்றுக் கருத்துக்கள் எழும். இதனால், கணவன் மனைவி உறவில் சிக்கல் எழும்.
திருமணம் செய்துகொள்ள மருத்துவ ரீதியாக சரியான வயது வரம்பு கணிக்கப்பட்டுள்ளதா? எதனால் அது?
ஆண்களுக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளும், பெண்களுக்கு 18 வயதிலிருந்து 23 வயதிற்குள்ளும் திருமணம் நடைபெறுவதே சிறந்தது. மேற்கண்ட வயதிற்குள் திருமணம் செய்துகொள்வதால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கும், தாம்பத்திய உறவில் அனுசரிப்பும் இருக்கும்.
குழந்தை பிறப்பை தாமதமாக்குதல் மற்றும் ஒத்திப்போடுதல் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
இதனால் மலட்டுத்தன்மை, கரு கலைந்துபோவது, மூளை வளர்ச்சிகுறைபாடுள்ள குழந்தை பிறத்தல், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் அதிகரிக்கிறது. 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் வரும்.
குழந்தையின் நிறம், உயரம், பருமன் போன்றவை தாயின் உடல் அமைப்பைப் பொருத்து அமையுமா, தந்தையின் உடல் அமைப்பை பொருத்து அமையுமா? அல்லது அதில் சதவீத பங்களிப்பு ஏதேனும் உள்ளதா?
இதைக் கணிக்க முடியாது.
குழந்தையின் குண நலன்கள் யாரைப் பின்பற்றி அமையும்?
இது தாய், தந்தை இருவரையும், அவர்களின் முன்னோர்களையும், சுற்றுச் சூழலையும் பொருத்து அமையும்.
கலப்புத் திருமணங்களை மருத்துவ ரீதியாக அங்கீகரிப்பது ஏன்?
இவ் வகைத் திருமணங்களால் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு அணுக்கள் (Different genetic materials) சேர்கின்றன. இதனால் அறிவுத் திறமையான குழந்தைகள் பிறக்கின்றன.
பிறக்கப்போகும் குழந்தைகளை எந்தெந்த பரம்பரை நோய்கள் தாக்கும்? அப்படி தாக்காமலிருக்க, திருமணத்திற்கு முன் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
இதய சம்பந்தமான நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் போன்றவைகள் தாக்கும் அபாயம் உண்டு. திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் தங்களுக்கு இந்த பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் சென்று உரிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது.
உடல் குறைபாடு உள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தப் பாதிப்பு வருமா?
இதற்கான வாய்ப்பு 25 முதல் 35 விழுக்காடு இருக்கிறது.
நம்நாட்டு கலாச்சாரத்திற்கு திருமணத்திற்கு முன்னே ஆணுக்கும் பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை அவசியம் என்பது கட்டாயமாக்கப்படுவது நல்லதா, கெட்டதா?
நல்லதே! ஏனென்றால் திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் குழந்தையின்மை, தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கல்கள், இதனால் ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை முன்கூட்டியே தடுத்துவிடலாம்.
குழந்தையின்மை என்பது பரம்பரை குறைபாடா?
இல்லை, ஆனால் பெண்களின் கருமுட்டையில் தோன்றும் நீர்கட்டிகள் மட்டும் பரம்பரை குறைபாடு காரணமாகத் தோன்றுகிறது.
ஜெனரல் மெடிக்கல் செக்கப் இருபாலருக்கும் திருமணத்திற்கு முன்பு அவசியமா? இதனை எப்படி புரியவைப்பது?
நிச்சயமாக இது அவசியம். இதைக் கவுன்சிலிங் மூலமாக புரியவைக்க முடியும்”
இது வெறும் கேள்வி பதில் பகுதி மட்டுமல்ல…திருமணம் செய்யப்போகிறவர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டியும் ஆகும்.