Home சூடான செய்திகள் பொதுவாக பெண்கள் தங்கள் ஆண் துணையுடன் உடல் ரீதியான நெருக்கத்தை தள்ளி போடுவதற்கான காரணங்கள்!!!

பொதுவாக பெண்கள் தங்கள் ஆண் துணையுடன் உடல் ரீதியான நெருக்கத்தை தள்ளி போடுவதற்கான காரணங்கள்!!!

22

09-1423471607-1-loveஇன்றைய நாகரீக உறவு முறைகளில் செக்ஸ் ரீதியான சூழல் மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் உடல் ரீதியான நெருக்கம் என வரும் போது பெண்களின் மனதில் முக்கியமான கேள்வி மனதில் எழும் – “நான் ஏன் உடலுறவு கொள்வதை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ள கூடாது?”. அப்படியானால் ஒரு உறவில், தன் துணையுடன் உறவில் ஈடுபடுவதை ஒரு பெண் தள்ளிப் போடுவதற்கு என்ன காரணமாக இருக்கும்? இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அழுத்தமே. இதற்கென தனிப்பட்ட வயது வரம்பு கிடையாது.

அதேப்போல் கன்னித் தன்மையை இழப்பதைப் பற்றிய பிரச்சனை மட்டும் கிடையாது இது. பல உறவுகளை கடந்து வரும் பெண்ணாக இருந்தாலும் சரி, தன் துணையுடன் உடல் ரீதியான நெருக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது காத்திருக்க வேண்டுமா என்பதில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம். அதனால் செயலில் இறங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. அவற்றைப் பற்றி பார்க்கலாமா?

உடலுறவில் ஒரு பிரச்சனை உள்ளது – நீங்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் கூட நடந்ததை இல்லாமல் ஆக்க முடியாது. அதனால் உடல் மற்றும் உணர்வு ரீதியாக ஏற்பட்டுள்ள நினைவுகளை நீக்க கண்டிப்பாக எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. அதனால் அவர் தான் உங்களுக்கானவர் என்பதை உறுதி செய்யாதவரை அவருடன் உடலுறவில் ஈடுபடுவதை தாமதிப்பதே நல்லது. அவருடன் அதிக நேரம் செலவழிப்பதால் அவர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ரீதியான நெருக்கம் என்பது ஒரு வித உணர்ச்சியின் வெளிப்பாடே. ஆனால் அதனால் ஏற்பட போகும் பின் விளைவுகளை எண்ணி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முறை ஈடுபட்ட பிறகு அதை எண்ணி வருந்தினாலோ அல்லது பழி கூறுவதாலோ எந்த ஒரு பிரயோஜனும் இல்லை.

அனைத்து வித பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளை எடுத்த பிறகும் கூட, திட்டமிடாத கர்ப்பம் என்ற ஒரு மிகப்பெரிய இடர்பாட்டில் வந்து நீங்கள் மாட்டிக் கொள்ள கூடும். இதுப்போக அவரிடம் இருந்து பாலியல் ரீதியான நோய் ஏதேனும் உங்களுக்கு பரவும் இடர்பாடும் கூட உண்டு. இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கலாம். ஆனால் இந்த பிரச்சனைகளில் அவர் உங்களுக்கு கைக்கொடுக்கும் அளவிற்கு உளவியல் ரீதியாக மன பக்குவத்தை கொண்டுள்ளாரா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

இன்றைய நாட்களில் ஒரு பொதுவான டிரென்ட் ஒன்று உருவாகி கொண்டிருக்கிறது. அதன் படி, திருமணத்திற்கு முன்பாகவே தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். பல முறை தங்களின் பொருத்தத்தை ஜோடிகள் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். இதில் செக்ஸ் ரீதியான பொருத்தமும் அடக்கம். இருப்பினும், கேட்கும் அளவிற்கு இது ஒன்றும் அவ்வளவு நல்லதல்ல. ஒருவருடன் சில முறை படுப்பதால் மட்டும் அவருடைய படுக்கையறை திறனை நீங்கள் மதிப்பீடு செய்து விட முடியுமா? செயலாற்றத்தில் பதற்றம் மற்றும் தேவையற்ற கற்பனைகள் ஆகியவைகள் முதல் முறை மோசமான அனுபவத்தை ஏற்படுத்தும். அதனால் இதனை வைத்து அவரை மதிப்பீடு செய்து விட்டதாக உங்களால் கூறி விட முடியுமா? பெண்களே, அதனால் ஒருவர் உங்களுக்கு படுக்கையில் சிறந்த கணவராக செயல்பட முடியுமா என்பதை தெரிந்து கொள்ளும் எண்ணத்தில், உடலுறவில் ஈடுபடுவதை அவசரப்படுத்தாதீர்கள். கண்டிப்பாக அது நல்லதல்ல.

திருமணம் ஆகும் வரை கன்னியாக இருக்கவே பல பெண்களும் விரும்புவார்கள். ஓரளவிற்கு உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்டாலும் கூட, தங்களுக்கு கணவனாக வரும் ஆணுடன் தான் உடலுறவில் ஈடுபட விரும்புவார்கள். தங்கள் காதலன் அல்லது கணவனாக வரப்போகும் ஆணின் கட்டாயத்தின் காரணமாக பல பெண்கள் உடலுறவுக்கு தலையை சரியென ஆட்டி விடுகிறார்கள். பல ஜோடிகள் தங்கள் உறவை வலுப்படுத்தும் ஒரு விஷயமாக இதனை பார்க்கின்றனர். நம் உறவில் ஒரு சில சமரசங்களில் நாம் ஈடுபட வேண்டியது அவசியம் தான். ஆனால் அதற்காக உங்களின் நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை துறந்து செயல்பட வேண்டிய அவசியமில்லை. இந்த எளிய விஷயத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், உங்கள் இருவருக்கும் மன ரீதியான பொருத்தம் இல்லாமல் கூட இருக்கலாம்.