Home சமையல் குறிப்புகள் பொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்

பொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்

31

299c5382-4a72-4413-bb77-cf55c6e40385_S_secvpfதேவையான பொருட்கள் :

கரும்புச்சாறு – 2 கப்
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய், முந்திரி, திராட்சை – தேவைக்கு

செய்முறை :

* பச்சரிசி, பாசிப்பருப்பை சுத்தம் செய்து குழைய வேக வைக்கவும்.

* நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.

* அடி கனமான வாணலியில் நெய் ஊற்றி வெந்த அரிசி, பருப்புகலவையுடன் கரும்புசாறு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக முந்திரி, திராட்டையை மேலே தூவி இறக்கி பரிமாறவும்.

* கரும்பு சாறே இனிப்பு மிகுந்தது என்பதால் வெல்லம் சேர்க்க தேவையில்லை.