இப்போது அந்த மினி பெப்பர் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! மினி பெப்பர் இட்லி தேவையான பொருட்கள்: மினி இட்லி – 12 வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு… மிளகு – 1 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு… எண்ணெய் – 2 டீஸ்பூன் பூண்டு – 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது செய்முறை: முதலில் இட்லி மாவைக் கொண்டு மினி இட்லிகளை சுட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து,
அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு பிரட்டி, பின் மினி இட்லிகளை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மினி பெப்பர் இட்லி ரெடி!!! குறிப்பு: வேண்டுமானால் மினி இட்லிக்கு பதிலாக சாதாரண இட்லியைக் கொண்டும் இதனை செய்யலாம். அதற்கு சாதாரண இட்லிகளை சுட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்