Home பாலியல் பெண் செக்ஸ் பற்றி பேசினால் தவறா?

பெண் செக்ஸ் பற்றி பேசினால் தவறா?

22

thumbnailதனது செக்ஸ் தேவைகள், ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள் என்ற கருத்தை நினைத்துக் கொண்டு பீதியடையத் தேவையில்லை.

செக்ஸைப் பொறுத்தவரை செயல்படுபவன் ஆண் அவனுடைய செயல்பாட்டிற்கு உடன்பட்டு, அவன் விருப்பப்படி அவன் ஆசையைப் பூர்த்தி செய்வதுதான் மனைவியின் கடமை என்ற கண்ணோட்டம் முற்றிலும் தவறு. கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து ஆக்டிவாக உடலுறவில் ஈடுபட்டால்தான் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.

செக்ஸ் தொடர்பான மாயைகள் தகர்ந்து வருவதின் ஆரம்ப அறிகுறிகள் இவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தத்தம் செக்ஸ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தயாராக வேண்டும்.

கணவனும், மனைவியும் தங்களுடைய செக்ஸ் விருப்பங்கள் பற்றி மனம் திறந்து பேச வேண்டும். உடலுறவை ஆரம்பிப்பதிலும், அதற்கான தூண்டுதலிலும் இருவருக்குமே பங்குள்ளது. இது ஒரு கூட்டுப் பொறுப்பு.

செக்ஸ் சுகத்தை அனுபவிப்பதில் பெண் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தாவிட்டால் ஆணுக்கு தனது செயல் திறன் பற்றி சந்தேகம் வந்து விடுகிறது. இந்த சந்தேகம் வலுப்பட்டு ஒரு வித குற்ற உணர்வின் தவிப்போடு மனைவியை நெருங்கும்போது, முன்பு இருந்ததை விட செயல் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில் ஆண்மையை பறி கொடுக்கவும் நேரிடுகிறது.

கணவனும், மனைவியும் வெளிப்படையாக செக்ஸ் பற்றி பேசும் பழக்கத்தைப் பின்பற்றினால் இப்படிப்பட்ட ஆபத்தைத் தடுக்க முடியும். பெண்களைப் பற்றிய ஆண் கண்ணோட்டமும் இன்று மாறி வருகிறது. பெண் ஆணுக்குச் சமமானவள் அல்ல குறைபாடுள்ள ஆண்தான் பெண் என்று சொன்ன சிக்மண்ட் ஃபிராய்டின் கூற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள ஆண்களே இன்று தயாராக இல்லை.

ஆரோக்கியமான மாற்றம் ஆரம்பமாகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும், பெண்களும் குறிப்பாக பெற்றோர்களும் செக்ஸ் பற்றி தவறான கண்ணோட்டங்களை கை கழுவி விட்டு செக்ஸ் அறிவை முறையாக, முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்

ஆண்களைப் பற்றி பெண்களிடம் உள்ள தவறான நம்பிக்கைகள்:

1. தன்னை நேசிக்கும் கணவன் வீட்டு வேலைகளில் தனக்கு உதவியாக இருப்பார்.

2. தன்னை நேசிக்கும் கணவன் தன்னுடன் இருந்து நேரத்தை செலவு செய்ய விரும்புவார். தன்னுடன் பேசிக் கொண்டிருப்பார்.

3. உற்சாகத்தை கணவர் எப்போதும் என்னோடு பகிர்ந்து கொள்வார்.

4. என்னை உண்மையில் நேசித்தால் என்னிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவார்.

5. சினிமாவில் கதாநாயகன் காதலிப்பதுபோல கணவர் எப்போதுமே ரொமாண்டிக்காக இருப்பார்.

6. கணவர் செக்ஸ் பற்றிய எல்லா விவரங்களும் அறிந்திருப்பார்.

7. எப்படியெல்லாம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

பெண்ணை முழுமையாகப் புரிந்து கொண்டு, ஆண் இன்பம் அடையச் செய்யாவிட்டால் அவள் மனசுக்குள் காயப்படுகிறாள். கோபமும், வெறுப்பும் ஏற்படுகிறது. இருதரப்பிலும் உள்ள இப்படிப்பட்ட தவறான கருத்துக்கள் மாறவேண்டும்.

பெண்களைப் பற்றிய ஆண்களின் தவறான நம்பிக்கைகள்:

1.வேலைப் பளுவினால் பெண்களிடம் செக்ஸ் ஆர்வம் குறைவதில்லை.

2.சின்னச் சின்ன பிரச்சினைகளை, சச்சரவுகளைக்கூட உடலுறவு மறக்க வைத்து இருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.

3.இருவரும் அருகருகே இருந்தாலே போதும்… தான் சந்தோஷப்படுவது போலவே மனைவியும் சந்தோஷப்படுவாள்.

4.தாங்கள் சொல்ல விரும்புவதை பெண்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

5. கடலின் ஆழத்தைக்கூட அளந்து விடலாம் பெண்ணின் மனதை அறிய முடியாது. பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது, திருப்திப்படுத்த இயலாது.

6.எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், பெண்கள்

7. உடல் உறவுக்காக பெண்களுக்கு தூண்டுதல் தேவையில்லை.

8.ரொமான்ஸ் என்பது வாழ்த்து அட்டைகளையும், மலர்க்கொத்தையும் அனுப்புவது.