Home உறவு-காதல் பெண்ணை புரிந்து கொள்வது எப்படி?

பெண்ணை புரிந்து கொள்வது எப்படி?

39

ஆண்களை விட பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். ஒருவரால் பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று. ஆண்கள் பெண்கள் மிகவும் சிக்கலானவர்கள் என்று புகார் அளிப்பார்கள். ஆம், அது உண்மையே, பெண்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் சிக்கலானது தான்.

இக்கட்டுரையில் பெண்கள் இப்படி புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகள் தான் பெண்களை சிக்கலானவர்களாக்குகிறது. சரி, விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

எதிராகத் தான் செய்வார்கள், சொல்வார்கள்

பெண்களுக்கு ஒருவர் தன்னிடம் எதை செய்யச் சொல்கிறார்களோ, அதற்கு எதிராக செய்வதை மிகவும் விரும்புவார்கள். எனவே உங்கள் காதலி/மனைவியால் ஏதேனும் காரியம் நடக்க வேண்டுமானால், எதிராக சொல்லுங்கள், இதனால் உங்கள் விருப்பம் எளிதில் நிறைவேறும்.

பெண்களுக்கு உண்மையில் என்ன வேண்டும்?

ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருப்பார்கள். அதுவும் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் ஆண், ஸ்மார்ட்டாக, அன்பானவராக, அக்கறை உள்ளவர்களாக, கவர்ச்சிகரமானவராக, நேர்மையானவராக மற்றும் பல எதிர்பார்ப்புக்களை கொண்டிருப்பார்கள். இதில் ஒன்று தவறினாலும், அது அந்த ஆணை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும்.

ஒரே மாதிரியான ஆணைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்

பெண்கள் எப்போதும் கெட்ட குணங்கள் உள்ள ஆணால் எளிதில் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். இதை மட்டும் பெண்களால் தவிர்க்கவே முடியாது. மேலும் எப்போதுமே இம்மாதிரியான ஆண்களை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பதாலேயே, பெண்கள் சிக்கலானவர்களாக உள்ளார்கள்.

குருட்டுத்தனமான ஈர்ப்பு

பெண்கள் ஒரு ஆணின் வெளித்தோற்றத்திலேயே எளிதில் ஈர்க்கப்பட்டு, எதிர்பாராதவிதமாக கடலை போட ஆரம்பித்துவிடுவார்கள். இதுவே ஆணின் மனதில் ஒரு தவறான குறிப்பைக் கொடுத்து, உறவுகளை சிக்கலாக்குகிறது.