ஒரு காலத்தில் அழகு சாதனம் என்றாலோ ஃபேர்னஸ் க்ரீம் என்றாலோ எல்லோருக்கும் நினைவுக்கு வரும் ஒரே விஷயம் ஃபேர் அண்ட் லவ்லி தான். ஆனால் இன்று அதை மார்க்கெட்டிலிருந்தே காலி செய்யுமளவுக்கு பல நவீன அழகு சாதன க்ரீம்கள் வந்துவிட்டன.
பொதுவாக அழகு என்றாலே நீளமாக ஷேப் செய்யப்பட்ட நகங்கள், சீராக்கப்பட்ட பற்கள், பளிச்சென்ற லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளும் உதடுகள், ஃபவுண்டேஷன் க்ரீம்கள், வண்ண வண்ண நெயில் ஆர்ட் டிசைன்கள், மை தீட்டப்பட்ட கண்கள் இவைதான் நம்முடைய நினைவுக்கு வரும்.
ஆனால் பெண்களுக்காக பிரத்யேகமா மற்றொரு ஸ்பெஷல் க்ரீம்களைத் தயாரித்து வெளியிடுவதில் ஒரு நிறுவனம் முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த க்ரீம்களும் தற்போது பெண்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றன.
அது என்ன க்ரீம்னு தானே கேட்கறீங்க… பெண்ணுறுப்புகளை அழகாக்கும் க்ரீம்கள் தான் அவை. அந்த இடத்துக்கென்றே ஸ்பெஷலாகத் தயாரிக்கப்படுபவை அவை.
vv என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனம் பெண்ணுறுப்பை பளிச்செனவும் எடுப்பாகவும் காட்டவதற்கான v பியூட்டி ஷீட், சீரம், லூமினைசர்கள், ஃபேர்னஸ் க்ரீம் ஆகியவற்றைத் தயாரித்து மொர்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றன. அந்த க்ரீம்களின் மீது பெண்களின் கவனமும் ஆர்வமும் கவியத் தொடங்கியிருக்கின்றன என்றே சொல்லலாம்.
பிறப்புகளில் எந்த கெமிக்கல் கலந்த பொருள்களையும் பயன்படுத்தக்கூடாது. அது அலர்ஜியையும் நோய்த் தொற்றுக்களையும் உண்டாக்கிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு, இந்த புதிய வரவின் மூலம், அப்படி இந்த க்ரீமில் என்ன இருக்கிறது என்று பெண்களைத் தேடிப் போக வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.