பரவலாகவே தினமும் உடலுறவில் ஈடுபட்டால் பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும் அல்லது இலகுவாகிவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே போல குழந்தை பிறந்து பிறகும் கூட பெண்களின் பிறப்புறுப்பு சற்று பெரியதாகிவிடும் என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.
இவை அனைத்துமே வெறும் அனுமானங்களாக தான் இருக்கின்றன. பெண்ணுறுப்பு எதனால் இருக்கமைடைகிறது, இலகுவாகிறது என்று பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. சில காரணங்களால், பெண்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் மட்டுமே அவர்களது பெண்ணுறுப்பில் மாற்றம் ஏற்படும்ஸ.
பெண்ணுறுப்பானது எலாஸ்டிக் தன்மை உடையது. இது விரியவும் செய்யும், குறுகவும் செய்யும். ஏறத்தாழ வாயை போல. இது எவ்வளவு பெரிதானாலும் மீண்டும் இயல்பு நிலைக்கு சுருங்கும் தன்மைக் கொண்டது. இப்படி தான் பெண்ணுறுப்பு இயற்கையாக செயல்படுகிறது.
பெண்களுக்கு பதட்டம் ஏற்படும் போது பெண்ணுறுப்பு தசை வளையும் இறுக்கமாகிறது. பெண்களின் பதட்டமான நிலைக்கு அவர்களது பெண்ணுறுப்பு வளையம் பதிலளிக்கிறது (Response) என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, அவர்களாக உச்சம் அடையும் நேரத்தில் பெண்ணுறுப்பு இலகுவாகும். இந்த தருணத்தில் ஆண்கள் எளிதாக உடலுறவில் ஈடுபட முடியும் என்று கூறப்படுகிறது.
பெண்கள் உச்சம் அடையும் போது பெண்ணுறுப்பு பெரிதாவதில்லை, அந்நிலையில் அது எலாஸ்டிக் தன்மையை போல விரிவடைகிறது. மற்றப்படி பெண்ணுறுப்பு உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் பெரிதாகாது.
சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், ஒன்று அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும், அல்லது அவர்கள் போதிய அளவு தூண்டிவிடப்படாமல் இருந்திருக்க வேண்டும்.
ஆண்கள் உடலுறவின் போது உச்சமைடைய இரண்டு நிமிடங்கள் போதும், ஆனால், பெண்கள் உடலுறவின் போது உச்சம் அடைய குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும்.
உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், அவர்கள் இலகுவாக உணர, உடலுறவில் ஈடுபடும் முன்னர் கொஞ்சி விளையாடுதலில் ஈடுபட வேண்டும் என உடலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் உச்சம் காணும் போது விரிவடையும் பெண்ணுறுப்பு, தானாக சிறிது நேரத்தில் தனது இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பெண்கள் உச்ச நிலை உணர்வு குறையும் போது மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு பெண்ணுறுப்பு திரும்பிவிடுமாம்.
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு, குறிப்பாக சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு சில காலம் பெண்ணுறுப்பு சற்று பெரிதாக தோற்றமளிக்கும். இதற்கு காரணம் குழந்தைப்பேறு தான். குழந்தை பிறந்த பிறகு பெண்ணுறுப்பு இயல்பு நிலை திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகும். சிலருக்கு ஆறு மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளும்.