எனது பிறப்புறுப்பு திடீரென நிறம் மாறித் தெரிகிறது. வெள்ளைப்போக்கும் அதிகமாக இருக்கிறது. நோய்த் தொற்றாக இருக்குமோ என பயமாக உள்ளது. இதற்கான காரணம் என்ன?
கருத்தரித்திருந்தால், அந்தக் காலத்தில் பிறப்புறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தில் மாறுபாடுகள் இருப்பதால் அவ்வப்போது அதில் நிறமாற்றம் ஏற்படும்.
சில சமயம் பிறப்புறுப்பு வெளுத்தும், நீலமும் சிவப்பும் கலந்தும், பிரசவ சமயத்தில் பழுப்பு நிறமாகவும் மாறும்.
கருப்பைக் கழுத்துப் பகுதியில் கருவின் அழுத்தத்தால் உராய்வுகள் ஏற்பட்டு புண்ணாவது உண்டு.
இதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படும். மற்றபடி, பிரசவத்துக்குப் பிறகு வெள்ளைப்போக்கு சரியாகிவிடும்.