பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.
வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும்.
வறட்சிப் பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறையும்போதுதான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுகிறது. எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் நீர்ச்சத்து உடலில் குறையாமல் இருக்கும்.
மேலும் ஜூஸ் போன்றவற்றையும் அடிக்கடி குடிக்க வேண்டும். உறவின்போது அதிக அளவில் வலி இருந்தால் பிறப்புறுப்பு வறண்டிருக்கலாம். அதுபோன்ற சமயத்தில் உறவை நிறுத்துவதுதான் நல்லது. இல்லாவி்ட்டால் பெரும் வலி ஏற்பட்டு அவஸ்தைப்பட நேரிடும்.
கிரீம், ஜெல் போட்டும் கூட பிறப்புறுப்பு வறட்சி போகாவிட்டால் டாக்டரைப் பார்ப்பது நல்லது. ஏதாவது தொற்று ஏற்பட்டிருந்தால் கூட பிறப்புறுப்பு வறண்டு போகலாம். சில ஆணுறைகள் கூட பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தக் காரணமாக அமைகிறதாம்.
இப்படிச் சின்னச் சின்னதாக பிறப்புறுப்பு வறட்சியைச் சமாளிக்க நிறைய வழிகள் உண்டு. தொடர்ச்சியாக பிறப்புறுப்பு வறட்சி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதன் படி செயற்படலாம்.