Home பெண்கள் பெண்குறி பெண்ணின் அந்தரங்க உறுப்புயபில் துவாரங்களா ? (முழுமையாக படிக்க‍வும்)

பெண்ணின் அந்தரங்க உறுப்புயபில் துவாரங்களா ? (முழுமையாக படிக்க‍வும்)

153

MalluShalini-in-Black-Bra-and-Knickers-Photo240x600பெண்ணின் அந்தரங் க பாகத்தில் மூன்று தனித் தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர்போக ஒரு துவாரம் .. அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்… குழந்தை பெற்றுக்கொள் ள மூன்றாவது துவாரம்… சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவு கொள்ளும் ஆணு க்கு மர்மமான வியாதிகள் வரும்’ என்றெல்லாம்
கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு , கதைகள் எழுதிய அந்தக் கால டாக்டர்கள் உண்டு!
மருத்துவம் படிக்கிற எல் லோருக்கும் அடிப்படை யாக இரண்டு விஷயங்க ள் பற்றிய புரிதல் முக்கிய ம். ஒன்று ‘பிஸியாலஜி’ உடலில் எந்தெந்த பாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய் கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது! இரண்டாவது ‘ பேதாலஜி’ நோய் வந்தால் உடலி ல் எந்தெந்த பாகங்களில் என்னெ ன்ன மாற்றங்கள் நிகழ்கிறது… செ யல்பாடுகளில் என்ன குறைபாடு கள் ஏற்படுகிறது என்பது குறித்த ‘நோய் குண அறிவியல்.’ இந்த இர ண்டையும் நன்றாக புரிந்துகொ ண்டவர்களே டாக்டர்கள்.
செக்ஸ் தொடர்பான நோய்களில், சிக்கல் இந்த அடிப்படை விஷ யத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள் , அவற்றி ன் செ யல்பாடுகள், உறவு கொள்ளும்போ து அவற்றின் பங்கு… இவை பற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும் போது இதில் நிக ழும் மாற்றங்க ளை அறிய முடியும். அடிப்படையே புரியாத பட்சத் தில்..?
பல டாக்டர்கள் இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னை களுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்து வந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பான எல்லா பிரச் னைகளுக்கும் மனதுதான் காரணம்’ என்று ஸ்டிராங் காக சொல்லி, ஏதோ அவ ர்களால் முடிந்த அளவுக் கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தா ர்கள்.
இப்படிப்பட்ட ஒரு பின்ன ணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி! மற்றவர்களுக்கு இது எப் படியோ… ஆனால், செக்ஸ் பிரச்னைக ளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு இது ‘மனி தன் நிலவில் காலடி வைத்ததை விட பெரிய அறிவியல் சாதனை.’ அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன் று ‘செக்ஸாலஜி’ என்ற பெய ரில் நவீன சிகிச்சை முறை ஒன்று உரு வாக அடித்தளம் போட்டுக் கொடு த்தது. இப்போது பலரும் செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொ ண்டு அதை மூடி மறைக்காம ல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி பிளாட் பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வ யோதிக அன்பர்க ளை’க் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய் சொத்தை இழக்காமல், அறிவியல் ரீதி யான தீர்வு தேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார் கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!
ஒரு காலத்தில் ‘மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான் இரு க்கிறது’ என்று உலகம் முழுக்க எல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. ‘விதையில் எப்போது ம் பழுது இல்லை… நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனா ல் விதைத்த விதை பொய்த்துப் போகிறது’ என்று இதை நாசூ க்காக சொன்னார்கள்.
அரியணைக்கு வாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்த னையோ மகாராணிகள் அநியாயமாக ‘மலடி’ பட்டம் சுமந்து, மர ண தண்டனையை பரிசாகப் பெற்று, வாகள்முனைக்கு தங்கள் தலையைக் கொடு த்த பரிதாப சம்பவங்கள் அ நேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இ ருக்கின்றன! பிரச்னை மகா ராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப் புரத்துக்கு அடுத்தடு த்து வரும் மகாராணிகளில் யாரோ ஒருத்தி, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, யாருடனா வது சேர்ந்து தப்பு செய்து ‘இளவரசனை’ப் பெற்றெடுத் து விடுவாகள். அரசனும் ” இப்ப புரியுதா? நான் ஆம்ப ளை சிங்கம்தான்!” என்று மகிழ்ந்து விடு வான்.
ஆனால், சராசரி குடும்பங்க ளில் எத்தனையோ பிரச் னைகள். குழந்தைப்பேறு இல்லாததால் ஏராளமான மண முறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சை அவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.
ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்த “படுக்கை அறை” ஆராய்ச்சி தான் அதுபோன்ற தீர்வுகளுக்கு திறவுகோலாக அமைந்தது. இன் றைக்கு உலகம் முழுக்க கோடிக்க ணக்கான தம்பதிகள் விவாக ரத்து மூலம் பிரிவதைத் தடுத்தது… பல பெண்கள் ‘மலடி’ என்ற பட்டத்தைச் சுமந்து வாழ்க்கையை இழந்து அம் மா வீட்டில் காலம் முழுக்கக் கண் ணீரோடு கிடப்பதைத் தடுத்தது… என மகத் தான புண்ணியம் இந்த ஆராய்ச்சிக்கு உண்டு.
அந்தப் படுக்கை அறை இரண்டு தடு ப்புகளாக பிரிக்கப்பட்டு இரு ந்தது. ஓர் அறையில் மிருதுவான படுக்கை. அதற்குகள்தான் ஜோ டிகள் நுழையும். அந்த அறையின் கண்ணாடிச் சுவர்கள் சன்கன் ட்ரோ ல் ஃபிலிமால் மறைக்கப்பட்டு இருக்க, அதற்கு வெளியே இ ருந்த குட்டி அறையில் ஆராய்ச்சிக் குழு இருக்கும். உகள்ளே இரு க்கும் ஜோ டிக்கு இந்தக் குழுவினர் தெளிவா கத் தெரிவார்கள்.
உள்ளே நுழையும் ஜோடி பரவசத் தை அனுபவிக்கும்போது அவர்கள து உடலில் நிகழும் மாற்றங்களை அளவெடுக்க, எல்லா விதமான ஏற் பாடுகளும் இருந்தன. அவர்களது நாடித்துடிப்பை அள க்க ஒரு கருவி, ரத்த அழுத்தத்தை அளவிட ரத்த அழு த்தமானி, மூளையில் நிகழும் மாற் றங்களை அளக்க ‘எலெக்ட்ரோ என்ஸஃபைலோ கிராம்’ எனப்படும் ஈ.ஈ.ஜி. கருவி, இதய மாற்ற ங்களை உணர்வதற்கு ஹோல்டர் மானிட்டர் என்ற கருவி, இது தவிர வியர்வை சுரப்பு, கண்ணில் நிகழும் மாற்றங்களை அளவி டும் கருவி… இப்படி பல கருவிகளின் இணைப்பு ஒயர்கள் அவர் கள் மீது பிணைக்கப்பட்டு இருந்தன. இவற் றை ‘சுகமான சுமைகளாக’ கருதிய படி அவர்கள் இயல்பாகத் தங்களு க்குகள் கலந்தா ர்கள்.
மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை அளவிடுவது சுலபம். ஆனா ல், அந்த உறவுக்கு அத்தியாவசியமான செக்ஸ் உறுப்புகளை எப்ப டி கண்காணிப்பது? ஆணு க்கு எல்லாமே உடலுக்கு வெளியில் இருந்தன. அத னால் அதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பெண்ணி ன் அந்தரங்க உறுப்பில் நிக ழும் மாற்றங்கள்? அதைக் கண்கா ணிக்கவும் ஒரு ஸ்பெஷல் கருவி தயாரான து. ஆணுறுப்பு போல நெகி ழ்வுத் தன்மை கொண்ட ஒன்றை செயற்கையாக பிளாஸ்டி க்கில் தயாரித்தனர். ஒளி ஊடு ருவும் வகை பிளாஸ்டிக்கால் ஆன அதன் உள்பக்கத்தில் மைக்ரோ கேமரா வைக்கப்பட்டது. அந்த செ யற்கை உறுப்பை வைத்து சில பெண்கள் சுய இன்பம் அனுபவிக் க, அதற்கு இருந்த காமிரா ஸ்டில் போட்டோக்களாகவும், வீடி யோ படமாகவும் பெண் உறுப்பில் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்தது.
Masters and Johnson
மிகச் சாதாரணமான ஆராய்ச்சிகளுக்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்போது இதை விட்டு வைத்திருப்பார்க ளா? ‘அறிவியல் போர் வையில் நடக்கும் விபசாரம்’ என பலர் கூக்குரல் எழுப்ப, மத அமைப்புக ளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. கொ ஞ்சம் தடம் புரண்டாலும் ஒட்டுமொத்த ஆராய்ச்சியே கேகள்விக் குறி ஆகும் நிலை உண்டானது.
ஆனாலும் ஊசிமுனையில் தவம் செய்வது போன்ற ரிஸ்க்கான இந்த ஆராய்ச்சியை வெற்றியோ டு செய் து முடித்தார், வில்லியம் ஹோவெ ல் மாஸ்டர்ஸ்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற மரு த்துவரான வில்லியம் மாஸ்ட ர்ஸ் பிறந்தது, ஒஹையோ மாநி லத்தில் இருக்கும் க்ளீவ்லாண்டில். பாரம்பரியமிக்க ரோசெஸ்டர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தார். அந்த பல்க லை க்கழகத் தில் தான் ‘செக்ஸ் உயிரியல்’ வல் லுநர் என பெயர் பெற்ற ஜார்ஜ் வா ஷிங்டன் கார்னர் பணி புரிந்தார். வாஷிங்டன் கார்னரை குருவா க ஏற்றுக் கொண் ட வில்லியம் மாஸ்டர்ஸ், எலிகளின் செக்ஸ் வாழ்க்கை பற்றி தான் முதலில் ஆராய்ந்தா ர். பெண்களுக்கு மாத விடாய் வருவது போல எலிகளுக்கும் ஒருவித திரவச் சுரப்பு நிகழ்கி றது என்பது அவரது ஆராய்ச்சி முடிவு.
அதை மனிதர்களின் செக்ஸ் சுழற்சியோடு ஒப்பிட்டு பார்க்க முயன்றபோது அவருக்குத் தோ ல்விதான் கிடைத்தது. சரியான புத்தகங்கள் அவருக்கு கிடைக் கவில்லை. கிடைத்த ஒரு சில ஆராய்ச்சி நூல்களும் மனித உடலில் செக்ஸின்போது நிகழும் மாற்றங்கள் குறித்து தப்பு த் தப்பாக சொல்லியிருந் தன. அப்போது அவருக்கு 24 வயசு. ‘தாங்கள் எங்கி ருந்து எதனால் வந்தோம் … தலைமுறை தலைமு றையாக தாயின் கருவில் உயிர்ச்சுழற்சி எப்படி நிக ழ்கிறது என்பது பற்றி யாரு ம் தெரிந்துகொள்ள ஆர்வ ம் காட்டவில்லையே?’ என்ற விஷயம் அவரை உறுத்தியது. ‘என் வாழ்நாள் முழுக்க செக்ஸ் பற்றிய உருப்படியான ஆராய்ச்சி தான் செய்யப் போகிறேன்’ என அ ப்போதே அவர் முடிவெடுத் தார்.
ஆனால், அவரது குருவான கார்னர் கவலையோடு அவ ருக்கு எச்சரிக்கை விடுத்தா ர். ‘‘உனக்கு அதற்கான வயது ம், பக்குவமும் வரும் வரை காத்திரு. இப்போது நீ சின்ன ப் பையன். நீ மனப்பூர்வமா கவே ஆராய்ச்சி செய்தாலும் அதற்கு தப்பான பெயர் சூட்டி உன்னைக் களங்கப்படுத்தி விடு வார்கள். எத்தனையோ மகத்தான ஆராய்ச்சியாளர்களுக்கு ‘செக் ஸ் வெறியர்கள்’ என பட்டம் கொடு த்து, தண்டனையும் கொ டுத்த தேசம் இது. அப்படி ஒரு நிலை உனக்கும் வரக் கூடாது. முதலில் ஒரு டாக்டராக புகழ்தேடிக் கொ ள். அப்புறம் ஏதாவது ஒரு நிறு வனத்தின் உதவியோடு ஆராய் ச்சி நடத்து. அப்போதுதான் பிரச் னை வராது’’ என்றார் அவர்.
மாஸ்டர்ஸ் அதை ஏற்றார். வா ஷிங்டன் பல்கலைக்கழக மருத் துவக் கல்லூரியில் வந்து வே லைக்கு சேர்ந்தார். மாதவிடாய் கோளாறுகள், மகப்பேறு பிரச் னைகள் என பெண்கள் மருத்துவத்தில் புகழ்பெற்றார். குறிப்பாக முதுமை வந்து மாதவி டாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு ஹார் மோன் ஊசிகளைப் போ ட்டு, மாதவிடாய் கோ ளாறு களை தடுக்கும் இவரது புதிய சிகிச்சை முறையைப் பெற பெண் கள் கூட்டம் ‘க்யூ’வில் நின்றது. செக்ஸ் தொட ர்பான ஆராய்ச்சி எதற்கும் பெண்களின் சப்போர்ட் தேவை. அது அவருக்கு கிடைத்து விட்டது.
அவரது ஆராய்ச்சி ஆசைக்கு தீனி போடும் விதமான விஷயங்கள் இங்கு ம் அவருக்கு கிடைத்தன. புகழ்பெற்ற மகப்பேறு நிபுணர் என அவர் பெயர் வாங்கியதால், ‘‘டாக்டர்! எனக்கு குழந் தை பாக்கியம் இல்லை’’ என்ற புலம்ப லோடு அவரிடம் நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்களைப் பரிசோதித் துப் பார்த்த மாஸ்டர்ஸுக்கு ஆச்சர்யம்…
உடல்ரீதியாக அவர்களில் பலருக்கு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ‘கு ழந்தை இல்லை’ என்ற மனக் குறை யோடு வரும் பெண்க ளில் நூற்றில் முப்பத்தேழு பேருக்கு செக் ஸில் ஆர்வம் இல்லை. அவர்கள் குறைந்த பட்ச ஈடுபாடு காட்டி கணவ ருடன் சேர்ந்து படுக்கை அ றைக்கு போனாலே போதும் … அவர்களது பிரச்னை தீர்ந்துவிடும். அதைச் சொன்னால் அவ ர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு செக்ஸில் நாட்டமு ம் இல்லை… அதுபற்றி தெ ரிந்து கொள்வதிலும் ஆர்வ ம் இல்லை.
தவறு எங்கே இருக்கிறது என்று அவருக்கு குழப்பம். இந்த குழப்ப ம் வந்தபோது அவருக்கு 38 வயது ஆகி யிருந்தது. கண்ணியமான டாக்டர் என்ற பெயரும் வா ங்கியிருந்தார். இப்போது நம் ஆராய்ச்சியைச் செய்ய ஆரம்பிக் கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது. அமெரிக்கர்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பிரதான விஷ யமாக மதித்த காலம் அது! செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே ஆபாசமான விஷ யமா க கருதப்பட்டது.
ஆனாலும் செக்ஸ் ஆராய்ச்சி கள் அங்கொன்றும், இங்கொ ன்றுமாக நடந்து பலத்த சர்ச் சைகள் எழுந்து கொண்டி ருந்தன. அது வரை செக்ஸை ஆராய்ந்த எல்லோருமே வெறும் இன்டர்வியூ டைப் ஆராய்ச்சிக ளைத்தான் முடித்திருந்தனர். பெரும்பாலும் அவர்கள் மனோத த்துவ நிபுணர்கள். எங்காவது ஒரு ஆபீஸ் போட்டுக்கொண்டு, தங்களிடம் சிகிச்சைக்குத் தனி யாக, தம்பதிகளாக வருகிறவர் களிடம் கேள்விகள் கேட்டு, அவர்கள் சொல்லும் பதில்க ளை வைத்து ஆராய்ச்சி முடிவு களை அறிவித்துக் கொண் டிரு ந்தனர். பலருக்கு கேள்விகள் புரியாது. சிலருக்கு தங்கள் பதிலை எப்படி சொல்வது என்று தெரியாது. ‘எந்த வயதில் முதல் தடவையாக உறவு கொண்டீர் கள்? ஒரு மாதத்துக்கு எத்தனை தடவை? மனைவியுடனான செக்ஸ் தவிர வேறு ஏதாவது உண் டா?’ என்கிற மாதிரியான கேள்விகள்தான். கூச்சப்பட்டுக் கொண்டு பலர் உண்மைகளை ம றைத்துவிடுவார்கள். இவை வெ றும் உணர்வுப்பூர்வமான விஷய ங்களாக இருந்ததே தவிர, அறிவி யல் ரீதியாக அவற்றால் உபயோக ம் எதுவும் இல்லை.
ஆனால், சும்மா இன்டர்வியூ ஆரா ய்ச்சி செய்ததற்கே எதிர்ப்புகள் எ ழும்போது, ‘நான் பரிசோதனைக் கூடத்தில் ஒரு படுக்கையை வைத்து, அதில் பலரை உறவு கொ ள்ளச் செய்து ஆராய்ச்சி செய் யப் போகிறேன்’ என்று சொன்னால் அமெரிக்க மக்கள் தன்னைக் கொன்றே விடுவார்கள்… அதன் நல்ல பலன்கள் பற்றி எவ்வளவு சொன்னாலும் யாருடைய மண் டையிலும் ஏறாது என்பதை மாஸ்ட ர்ஸ் உணர்ந்தார். அதனால் முடிந்த வரை தனது ஆராய்ச்சியை ரகசியமா க வைத்துக் கொள்ள தீர்மானித்தார்.
முதல்கட்டமாக தங்கள் பல்கலைக் கழக நிர்வாகியிடம் தனது ஆராய்ச்சி பற்றி விளக்கமாகச் சொல்லி அவரி டம் சம்மதம் வாங்கினார். பிறகு ஆ ராய்ச்சியைத் தடை செய்யும் அளவுக் கு சக்தி வாய்ந்தது எது எது… யார் யார் என்று ஒரு பட்டியல் போட் டார்.
இதில் முதலிடம் பிடித்தது சர்ச். அப்போது வரை மதம்தான் மனி தர்களுக்கான ஒழுக்க நெறிகளை வ ரையறுத்துக் கொண்டிருந்தது. ‘செக் ஸை ஒரு பாவச்செயல்’ என காலம்கா லமாக சொல்லி வந்த கிறிஸ்தவ பாதி ரியார்கள், செக்ஸ் தொடர்பான ஆராய் ச்சிகளையும் பாவச் செயலாகவே கரு தினார்கள். மற்ற விஷயங்களைப் பொ றுத்தவரை மனிதர்களின் மீதான மதத் தின் பிடி தளர்ந்து இருந்தாலும், ஒழுக் கத்தைப் பொறுத்தவரை அதன்பிடி இறுக்க மாகவே இருந்தது.
செயின்ட் லூயிஸ் நகரிலிருந்த அனை த்து தேவாலயங்களின் நிர்வாகிகளை யும் சந்தித்த மாஸ்டர்ஸ், தன் ஆராய்ச் சி மருத்துவ ரீதியாக எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல் லி, ‘நீங்கள் சம்மதம் சொன்னால் நான் இந்த ஆராய்ச்சியைச் செய்கிறேன்’ என முடிவெடுக்கும் பொறுப்பை அவர்கள் கையில் கொ டுத்தார். இந்த தந்திரம் நல்ல பலன் தந்தது. அவர்கள் மாஸ்டர்ஸின் வெளிப்படையான அணுகுமுறையி ல் கவரப்பட்டு அனும திதந்தார்கள்.
தனது ஆராய்ச்சிக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை உருவா க்கி இருந்தார் மாஸ்டர்ஸ். உண்மையில் அவர்களில் யாருடைய ஆலோசனையும் அவருக்கு தேவையில்லை. ஆனால் யார் யார் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என அவர் கருதினா ரோ அவர்களை வளைத்து சும்மா ஒ ரு கௌரவ பதவி கொடுத்து, அவர்க ள் வாயை மூடும் டெக்னிக் அது! நக ரில் இருக்கும் பிரபலமான மத குருக் கள் அனைவரையுமே அந்தக் குழுவி ல் ஆலோசகர்களாக நியமித்து விட் டார் மாஸ்டர்ஸ்.
அடுத்தது போலீஸ். இந்த ஆராய்ச்சியின் எந்த ஒரு கட்டத்திலும் போலீஸ் அதிரடியாக பரிசோத னைக் கூடத்தில் நுழைந்து அங்கு படுக்கை யில் இருப்பவர்களை, ‘விபசாரத்தில் ஈடு பட்டதாக’ (பரி சோதனைக்கு வந்தவர்களில் பல ர் தம்பதிகள் இல்லை என்பதை நினைவில் கொள்க!) கைது செய்யும் அபாயம் இருந்தது. அது மட்டுமில்லை… ஆராய்ச்சிக் குழுவினரை விபசாரத்துக்கு உடந் தையாக இருந்ததாகக் கைது செய்யக் கூடிய வாய்ப்பும் இருந்தது. பொதுமக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந் தால், ‘பொது அமைதி க்கு பங்கம் விளைவித்ததாகச் சொல்லி’ ஆராய்ச்சிக்கே தடை போட்டு விடுவார்கள்.
தன் ஆராய்ச்சி இப்படி குறை பிரச வம் ஆவதை மாஸ்டர்ஸ் விரு ம்பவில்லை. செயின்ட் லூயிஸ் நகர போலீஸ் கமிஷனரைச் சந்தி த்த அவர், எல்லா விவரங்களையு ம் சொல்லி, அவரையும் தனது கு ழுவில் ஆலோசகர் ஆக்கிவிட்டா ர்.
மூன்றாவதாக மீடியா. இதற்கு முன் ஆராய்ச்சி செய்த பலரைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி, உணர்ச்சிமயமான சூழ் நிலைகளை ஏற்படுத்தி, பொது மக் களை அவர்களுக்கு எதிராக போ ராட்டக் களத்தில் இறங்கவைத்து, அவர்களது இமேஜையே காலி செய்ததில் பத்திரிகைகளின் பங்கு பிரதானமானது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. பத்திரிகைகளில் தன்னைப் பற்றியும், தனது ஆராய்ச்சி பற்றியும் நல்லவிதமாக வராவிட் டாலும் பரவா யில்லை… தப்பாக எதுவும் வந்துவிடக் கூடாது என நினைத்த அவர், செயின்ட் லூயிஸ் நகரில் பிரபலமான இர ண்டு பத்திரிகைகளை நடத்திவந்த பதிப்பாளர் ஒருவரை சந்தித் து, ஆராய்ச்சி பற்றி சொன்னார். ‘‘நீங்களாக வந்து எங்களிடம் சொல்லாத வரை, இந்த ஆராய் ச்சி பற்றி ஒரு வரி கூட நான் எழுத மாட்டேன்’’ என்று அவர் உறுதி மொழி கொடுத்தார். அப் புறம் என்ன? அவரும் ஆலோச னைக் குழுவில்இடம்பிடித்தார்.
மாஸ்டர்ஸ் தன் ஆராய்ச்சியை முதலில் நடத்தியது செக்ஸ் தொழிலாளிகளிடம்…
இரண்டு ஆண்டுகள் நடந்தது அந்த ஆராய்ச்சி. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து செக்ஸ் தொழிலாளிகளை வரவழை த்து, தன் பரிசோதனைக் கூடத்தில் ஆராய் ச்சி செய்தார் வில்லிய ம் மாஸ்டர்ஸ். 118 பெண்கள். 27 ஆண் செக்ஸ் தொழிலாளிக ள். முதல்கட்டமாக அவர்களது பின்னணி யை விசாரித்துக் கொண் டு, அவர்களின் குடும்ப விவரங்கள், உடல்நிலை, உணர்வு கள், தொழில் அனுபவங்கள் என எல்லாவ ற்றையும் கேட்டு தொகுத் துக் கொண்டார் அவர்.
இந்த ஆராய்ச்சியின் போதுதான் அவருக்கு ஒரு சுவாரஸ்யமான உண்மை புரிந்தது. ‘செக்ஸ் தொழிலை பல பெண்கள் தேர்ந்தெடு த்தது சுலபமாக குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் வழி எ ன்பதால் மட்டுமில்லை… இந்த தொழிலுக்கு வந்திருக்கும் பெரும் பாலான பெண்க ளுக்கு சராசரி பெண்களை விட செக் ஸில் அதிக ஆசை இருக்கிறது’ என்ப துதான் அது!
முதல்கட்ட ஆராய்ச்சிகள் முடிந்து இர ண்டாவது கட்டத்துக்கு அவர்களிலிருந்து எட்டு பெண்கள் மற்று ம் மூன்று ஆண்களை மட்டும் செலக்ட் செய்தார். இனி ஆராய்ச்சி யில் அவர்களது உடலு ம், மனமும் இணைய வேண்டும். அவர்க ளை ஜோடிகளாக இ ணைத்து படுக்கை அறைக்கு அனுப்பி தனது கருவிகள் மூலம் ஆராய்ந்தார். அந்த மூன்று ஆண்களும், எட்டு பெண்களும் விதம் விதமான காம்பினேஷனில் பல மாதங்க ள் அந்த அறைக்குள் போய் படு க்கையை பயன்படுத்தினார்கள். கிட்டத்தட்ட ஆராய்ச்சி யின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘ஒரு செக் ஸ் தொழிலாளியின் உணர்வுகளும், உடல்ரீதியான மாற்றங்க ளும் எந்த அளவு இயல்பாக இருக்கும்?’
ஒரு பெண், தன் கணவன் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியபடி படுக் கையில் அனுபவிக்கும் பரவச உணர்வுகளுக்கும், காசுக்காக அந்த சுகத்தை த் தரும் ஒரு செக்ஸ் தொ ழிலாளியின் உணர்வுகளு க்கும் நிச்சயம் வித்தியாச ம் உண்டு. வெறும் செக்ஸ் தொழிலாளிகளை வைத்து நடத்தப்படும் இந்த சோதனை, எல்லா பெண்களையும் பிரதிபலிக்கும் சோதனையாக இருக்காது என்ப து அவருக்குப் புரிந்தது. இந்த சோதனையை வெறும் அனுபவமா க மட்டும் எடுத்துக் கொண்ட மாஸ்டர்ஸ், அந்தப் படுக்கை அறை யை தற்காலிகமாக பூட்டி வைத்துவிட்டார்.
அப்புறம் பல பெண்களே வந்து அவரது ஆராய்ச்சியைத் தொடர வைத்தது சுவாரஸ்யமான கதை!
இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெண்கள், படி க்கும் மாணவிகள் என பல ரும் அந்த பரிசோதனைக் கூடத்தின் வராண்டா பக்கம் வரவே பயந்தனர். எப்போதும் செக்ஸ் தொழி லாளிகள் கிண்டலும், கேலியுமா க பேசிக்கொண்டு உலாவரும் இட ம் என்றால் கேட்கவா வேண்டும்?
ஆனால், நாளாக ஆக, ‘இவர் நிஜ மாகவே சீரியஸாக ஏதோ செய் கிறார்’ என்பது அந்த வளாகத்தில் பலருக்கும் புரிந்தது. செக்ஸ் தொ ழிலாளிகள் மீதான ஆராய்ச்சியை திடீரென மாஸ்டர்ஸ் நிறுத்திய போது மாணவிகளும் நர்ஸுகளு ம் இயல்பாகவே அவரை அணுகி னார்கள். ‘தனது ஆராய்ச்சிக்கு குடு ம்பப் பெண்கள் தான் தேவை’ என்பதை அவர் சொன்ன போது அவ ர்களில் பலர் அதற்கு முன்வந்தா ர்கள். தங்கள் கணவர்களோடு வந்த நர்ஸ்கள், பாய் ஃபிரண்டுக ளைக்கூட்டிக்கொண்டு வந்த கல்லூரி மாணவிகள், மாஸ்டர் ஸிடம் ஏற்கெனவே சிகிச்சை பெ ற வந்த பெண்கள், தங்களுக்கு தெரிந்த தம்பதிகளை அனுப்பி வைத்த டாக்டர் கள் என பலரும் கைகொடுக்க வந்தனர்.
இப்போது அவருக்குத் தேவை இந்த பெண்களிடம் சரளமாக பேசி அவர்களிடமிருந்து தகவல் களைத் திரட்ட ஒரு பெண் உதவியா ளர். பத்திரிகைகளில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். ‘முதிர்ந் த அனுபவம் கொண்ட ஒரு இளம்பெண் தேவை. அவ ர் மனிதர்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு கு ழந்தை எங்கே உருவாகி எப்படி வருகிறது என்ற உண்மையைப் புரிந்தவ ராக இருக்க வேண்டும்.’
Masters and Johnson
இந்த வித்தியாசமான விளம் பரத்தைப் பார்த்து விட்டு அவரிடம் வந்தார் வர்ஜீனியா ஜான்சன். உளவியல் நிபு ணரான வர்ஜீ னியா ஜான்சன் மோண்டானாவில் பிறந்த வர். மாஸ்டர்ஸை விட பத்து வயது இளையவர்.
Masters and Johnson
பாட்டுப் பாடுவது, பத்திரிகை களில் எழுதுவது, விள ம்பர ஆரா ய்ச்சி என பல வேலைகளை அவ்வப் போது பார்த்து வந்த வர் ஜீனியா ஜான்சனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. மாஸ்டர்ஸின் ஆராய்ச் சியில் ஆர்வம் காட்டி அவரது உதவியாள ராக உடனே வேலைக்கு சேர் ந்தார் அவர். அதன் பின் மாஸ்டர்ஸும் வர்ஜீனி யா ஜான்சனும் பரிசோதனைச் சாலை படுக்கை அறைக்கு வந்த வர்களை ஆராய்ந்தனர். பரிசோத னைக்கு வந்தவர்கள் மொத்தம் 694 பேர். இதில் 312 பேர் ஆண்கள். 382 பெண்கள். இவர்களில் 552 பேர் திருமணமாகி கணவன், மனை விகளாக வந்தவர்கள். 98 பேர் விவாகரத்து ஆனவர்கள். 44 பேர் திருமணம் ஆகாதவர் கள். ஆண்க ளைப் பொறுத்தவரை 21 வயது இ ளைஞர்கள் முதல் 89 வயதில் இரு க்கும் குடுகுடு கிழவ ர்கள் வரை வெவ்வேறு வயதுகளி ல் இருந்தார்கள். பெண்கள்… பதி னெட்டு வயது கல்லூரி மாணவி முதல் எழுபத்தெட்டு வயதுபாட்டி வரை இருந் தார்கள். ஆறுபேர் கர்ப்பிணிகளாக பரிசோதனைக்கு வந்தார்கள். அந்த சமயத்தில் பரிசோதனைக் கூடத்தில் தங்கள் கணவரோடு உறவுகொண்ட அவர் கள் திரும்பவு ம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் வந்தார்கள். உறவு கொண்டார் கள்.
Masters and Johnson
ஒருவழியாக ஆராய்ச்சி முடிந்து அதை புத்தகமாக வெளியிடும் சம யம்… செக்ஸ் என்ற வார்த்தையே பரபரப்பு கிளப்பக் கூடியதாயிற் றே. அப்படி எதுவும் வெற்று பரபரப்பு கிளம்பி, இந்த ஆராய்ச்சியின் க ண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படுத் தி விடக்கூடாது என்பதில் மாஸ்டர் ஸ் உறுதியாக இருந்தார். ‘இது டாக் டர்களைக் குறி வைத்து நடந்த ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சி முடிவு கள் அவர்களுக்கு உதவ வேண்டு ம். செக்ஸ் பிரச்னைகளோடு வரு கிறவர்களுக் கு டாக்டர்கள் உரிய சிகிச்சை தர இது வழிகாட்டியாக இ ருக்கும். செக்ஸ் பிரச்னையால் குடு ம்பங்கள் சிதறாமல் இந்த புத்தகம் தடுக்கும்’ என அவர் நம்பினார். அந்த புத்தகமே கடினமான மருத்துவ வார் த்தைகளால் எழுதப் பட்டு இருந்தது. மருத்துவ புத்தகங்களை வெளியிடு ம் பாஸ்டன் நகரைச் சேர்ந்தலிட்டில் பிரௌன் நிறுவனத்திடம் புத்தக உரிமை யைக் கொடுத்த மாஸ் டர்ஸ், ‘‘பொதுமக்களை வாங்கச் சொல்லி விளம்பரம் கொடுக் காதீர்கள். என் புத்தகத்தை டாக் டர்கள் வா ங்கினால் போதும்’’ என்று சொ ன்னார். கவர்ச்சியா ன அட்டை எதுவும் இல்லாமல் ஏதோ பாட புத்தகம் மாதிரி வெறும் எழுத் துக்களை நிரப்பிய மேலட்டை யோடுதான் வெளி யானது அது!
1966&ம் ஆண்டு ‘Human Sexual Response’ என்றப்பெயரைத் தாங்கி அந்த புத்தகம் வெளிவந்தது. ஆ னால், அது வெளியாவதற்கு சில நாட்க ள் முன்னதாக புத்தகத்தைப்பற்றி அரை குறையாக தெரிந்து கொண்டு பலர் தா க்குதல் தொடுத்தனர்.
Masters and Johnson
‘‘செக்ஸ் உறவில் இருக்கும் இன்பத்தைப் பற்றி மாஸ்டர்ஸ் உணர வில்லை. மெக்கானிக்குகள் பைக்கை ஓட்டி டிரையல் பார்ப்பது மாதிரி இயந்திரத்தனமாக ஒரு அறையில் தாம்பத்ய உற வைச் செய்ய வைத்து அவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இப்படி அந் தரங்கத்தை அலசி ஆராய்ந்தால் அதில் இருக்கு ம் சுவாரஸ்யம் போய்விடும். விலங்குகள் கூட அதை சுக மாக அனுபவிக்கும் போது ம னிதன் மட்டும் இயந்திரத்த னமாக செக்ஸை அனுபவிக் கும் பரிதாப ஜீவன் ஆகிவிடு வான்’’ என்று சமூக ஆர்வலர் கள் கூக்குரல் போட்டனர். அ ந்த சமயத்தில்தா ன் இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்த விஷயமே வெளியில் தெரிந் தது.
இப்படி கிளம்பிய பரபரப்புகளே தீனி போட, மாஸ்டர்ஸும், வர்ஜீ னியா ஜான்சனும் இணைந்து எழுதிய அந்த புத்தகம் வந்த வேக த்தில் மளமளவென விற்றுத் தீர்ந்தது. புரியாத மொழி… பத்து டாலர் விலை என இருந்தாலும் அது ஐம்பது லட்சம் பிரதிகள் விற்றது. டாக் டர்கள் வாங்குவதற்கு முன்னரே சாதா ரண பொது ஜனங்கள் தான் வாங்கித் தள்ளினர். இதுவரை ‘நியூயார்க் டைம் ஸ்’ பத்திரிகை வெளியிட்ட விற்பனை ப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஒரே மருத்துவ நூல் அது தான்.
செக்ஸின் போது நாடித்துடிப்பு எவ்வள வு அதிகரிக்கிறது… ரத்த அழுத்தம் எ வ்வளவு எகிறுகிறது… கண்ணுக்குள் இருக்கும் பாப் பா எப்படி நெகிழ்கிறது என பல விஷயங்களையும் அந்த புத் தகம் டெக்னிக்கலாக சொல்லியிருந் தாலும் அதன் வீரியம் இன்னொரு பக்கத்தில்தான் வெளிப்பட்டது. காலம் காலமாக செக்ஸ் பற்றி இருந்துவந்த பல நம்பிக்கைக ளை ஒட்டுமொத்தமாக தகர்த்தது அது.
‘வயதுக்கு வந்த உடனே ஒருவர் செக்ஸில் ஈடுபட தயாராகி விடு வதாக நினைப்பது தவறு. உடல், மனசு இரண்டும் பக்குவப்பட வேண்டும். அ தன் பின்னரே ஒருவரால் செக்ஸில் ஈடுபட முடியும்’ என்றார் மாஸ்டர்ஸ்.
செக்ஸ் அறிவு என்பது தா னாக வருவதில்லை. மு றையாக கற்றுக் கொள்ள வேண்டியவிஷயம். ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை ’ என்கிற மாதிரியான பழமொழிகள் எல்லாமே தப்பு. மீன் குஞ்சு பிறந்ததும் நீந்தக் கற்றுக் கொள்வது மாதி ரி அந்த வயது வந்ததும் இதை தானாக கற்றுக் கொள்வார்கள் என நினை ப்பது ஆபத்து. அதை பலர் தப்பாக கற்றுக் கொள் வதால் பிரச்னை தான் வருகிறது. அப்படிப் பட்டவர்கள்தான் பிரச்னைகளில் தவிக் கிறார்கள் என்றார் மாஸ்டர்ஸ்.
அதேபோல ‘வயதானதும் செக் ஸைக் குறைத்துக் கொள்ள வே ண்டும்’ என்று அதுவரை சொல் லப்பட்ட அட்வைஸையு ம் அவர் மறுத்தார். ‘உடல் ஒத்துழைத்து, ஆர்வமுள்ள துணை கிடைத்தா ல் எண்பது வயதிலும் ஒருவர் இருபது வயது இளைஞனைப் போல செயல்படலாம்’ என்றார் அவர்.