Home உறவு-காதல் பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்

பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்

23

d26539f9-07f5-4e3d-89a2-a6f294021cbd_S_secvpfபெண்களுக்கு மிகவும் அதிகமான கற்பனை சக்தி உள்ளது. பெண்கள், தற்போதைய வாழும் நிலையிலிருந்து தாண்டி புதிய உறவு முறையினால் நல்ல எதிர்காலம் உண்டு என்று நினைக்கின்றனர். இதன் விளைவே திருமணத்தில் முடிகிறது. எப்பொழுதெல்லாம் திருமண பேச்சு ஏற்படுகின்றதோ, அப்பொழுது நாணத்தால் வெட்கப்படுவது சாதாரணமான நிகழ்வு.

மொத்தத்தில் எப்படியிருந்தாலும், ஒருவர் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான முடிவு எடுக்கும் தருணத்தில் நிறைய பொறுமை, பொறுப்பு மற்றும் அன்பை பொழிதல் வேண்டும். இப்போது பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார் என்பதை எப்படி அறியலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். நிலையற்ற காதல் வாழ்க்கையினால் மன சோர்வை அடையும் போது, நிலையான மணவாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமென்று தோன்றும்.

திருமணமான தம்பதிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும், உங்களது திருமண வாழ்க்கையை பற்றி கற்பனை செய்ய தொடங்குவதையும் கொண்டு அறியலாம். காதலனுடன் தன் எதிர்கால வாழ்க்கையை “காணும் போதும்”, மற்றும் தன் காதலுடனான வாழ்க்கையை நினைத்து சந்தோஷமடைவதும் ஒரு அறிகுறியாகும். காதலுனுடன் தன் குடியிருப்பு மற்றும் வாழ்க்கையை சரியான முறையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் திருமணத்திற்குச் செல்லும் போது, திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளின் திட்டத்தை கூர்ந்து கவனிப்பதன் மூலம், தன் திருமண ஏற்பாட்டிற்கும் உதவும் என்று நினைப்பர்.

வணிக அட்டைகள்/திருமண திட்டமிடுபவர்களின் முகவரிகள் முதலியவற்றை பாதுகாப்பாக பத்திரபடுத்துவர். மேலும் அதனை ஒப்பு கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட அவர்கள் மனதில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் ! காதலன், உனக்கு ஒரு ஆச்சரியம் என்றால், காதலியின் இதயத்தில் மகிழ்ச்சி உற்சாகத்தை உண்டாக்கி, இதய துடிப்பு படுவேகமாக இயங்க தொடங்கும். ஏனெனில் அது கல்யாண முன்மொழிவும் மற்றும் ஒரு அழகான மோதிரம் என்ற ஆச்சரியத்தை உள்ளடக்கி இருப்பதே ஆகும்.