Home சூடான செய்திகள் பெண்கள் தங்களை விட முதிர்ச்சியான ஆண்களை விரும்புவதற்கான காரணங்கள்

பெண்கள் தங்களை விட முதிர்ச்சியான ஆண்களை விரும்புவதற்கான காரணங்கள்

14

imagesபெண்களின் மனது எப்போதுமே ஒரு புரியாத புதிர் தான். அதிலும் அவர்கள் காதலில் என்ன எண்ணுகின்றனர், என்ன செய்வார்கள், அவர்களது மனநிலை காதலில் எப்போது எப்படி மாறும் என்றே சொல்ல முடியாது.
தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் வெளி உலகை தங்கள் சொந்த செலவிலேயே சுற்றி பார்க்கும் அளவு வளர்ந்துவிட்டதால் இது பெரிதாகி தான் நிற்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
கைக்குள்ளே அடங்கி இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் உலகில் ஏதோ சிம் கார்டை மாற்றுவது போல தான் தங்களது ஜோடிகளை மாற்றி திரிகின்றது இன்றைய காதல் புறாக்கள். எப்படியாவது ஒரு ஃபிகரை கரெக்ட் செய்துவிட முடியாதா என இளஞ்சிட்டுகள் சிறகடித்து தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் தான், இளம் பெண்கள் அவர்களை விட முதிர்ச்சியான ஆண்களை விரும்புகின்றனர் என்ற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏராளமான ஆண்கள் இதற்கு காரணம் எளிதாக வாழ்க்கையில் செட்டிலாகி விட தான் பெண்கள் இவ்வாறு மாற்றமடைந்துள்ளனர் என குற்றம் சாட்டினாலும். வேறு பல காரணங்களும் இருக்கின்றன…
படுக்கை தந்திரம்
இரவில் பெண்களை எவ்வாறு மகிழ்விக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர்கள் முதிர்ச்சியான ஆண்கள் என்பதால் பெண்கள் அவர்களை விரும்புகிறார்கள்.
புத்திசாலிகள்
இளையவர்களை விட வயதான ஆண்கள் பல விஷயங்களில் புத்திசாலிகள் என்பதால் தான் பெண்கள் அவர்கள் தேர்வு செய்கின்றனர். சில விஷயங்களில் இளையவர்கள் வளர்ந்து வரும் வரை பெண்களால் காத்திருக்க முடிவதில்லையாம்.
மாற்றம் விரும்பமாட்டார்கள்
இளம் ஆண்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பெண்கள் மாற வேண்டும் என விரும்புவார்கள். ஆனால், முதிர்ச்சியான ஆண்கள் அப்படி எல்லாம் ஏதும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
அதிகாரம்
வீட்டு நிர்வாகம் மற்றும் அதிகாரத்தை தற்போதைய இளம் ஆண்களை விட முதிர்ச்சியான ஆண்கள் தான் கச்சிதமாக செய்வார்கள். இதனால் எந்த வித மன கவலையும் ஏற்படாது என பெண்கள் எண்ணுகின்றனர்.
உரையாடல்
இவர்கள் மத்தியிலான உரையாடல்கள் மிகவும் முதிர்ச்சியாக இருப்பதாகவும். தாங்கள் ஏதேனும் தவறு செய்வது போல இருந்தாலும் அதை திருத்திக்கொள்ள உதவுகிறார்கள் எனவும் பெண்கள் கூறுகின்றனர்.
செட்டிலான வாழ்க்கை
வாழ்க்கையை தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து மெதுவாக முன்னேவது என்பதை கடந்து முதிர்ச்சியான ஆண்களை திருமணம் செய்துக் கொள்ளும் போது வாழ்க்கையின் தொடக்கமே கச்சிதமாக தொடங்குகிறது என்பது பெண்களின் கருத்து.
உபசரிப்பு
முதிர்ச்சியான ஆண்கள், பெண்களை தங்களுக்கு இணையாக மதிப்பது, உபசரிப்பது பெண்களை மிகவும் கவர்கிறது.
கோபம் குறைவு
தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு இல்வாழ்க்கையை முதிர்ச்சியான ஆண்கள் கெடுப்பதில்லை. ஆனால், இளம் ஆண்கள் தொட்டதற்கு எல்லாம் கோபப்பட்டு உறவினுள் விரிசல் ஏற்பட காரணமாய் இருப்பதாய் பெண்கள் உணர்கின்றனர்.