செக்ஸ்…அச்சச்சோ..அப்படி சொல்றதே இந்தியாவுல தவறான ஒன்று. யாராவது செக்ஸ், செக்ஸ் படங்கள் பத்தி பேசுனா கூட, ‘அந்தப்படம், அது, அதுடீ, இதுடீ’, என்றுதான் நமக்கு பேசியே பழகியிருக்கோம். இந்தியாவில் கொலை கூட செய்து கொண்டு சுதந்திரமாக இருக்கலாம். ஆனால், செக்ஸ் பத்தி சுதந்திரமா பேசுனா ‘அதெல்லாம் தப்பு’, ”சீ…நீ என்ன இதெல்லாம் பேசுற?”ன்னுதான் கேப்பாங்க. அதுலயும் குறிப்பா பெண்கள் பேசவே கூடாது. ஆனால், கல்யாணம் செஞ்சுட்டா நேரடியா செக்ஸ் உறவை சந்திச்சுதான் ஆகணும். அப்ப மட்டும் அது புனிதத்தில் சேர்ந்துடும். செக்ஸ் படங்கள் கூட ஆணுக்கான ஒன்றாகத்தான் இந்தியாவில் இருக்கிறது. இன்னொரு விசயம், செக்ஸ் உறவில் பெண்கள் தான் விருப்பப்பட்டதை கேட்க கூட இங்கே இடம் இல்லை. தான் செக்ஸ் உறவில் திருப்தி அடைகிறார்கள் என்று சொல்லவும் முடியாது. பெரும்பாலான பெண்கள் திருப்தியையோ, செக்ஸ் உறவில் உச்சத்தை அடைவதே இல்லை. ஆண்கள், தனக்கான வேலையை மட்டும் முடித்துக்கொண்டு போய் விடுகிறார்கள். ஆனால், இங்கே உலகின் 11 ஹாலிவுட் பிரபலங்கள் தாங்கள் எப்படி செக்ஸ் உறவில் உச்சத்தை அடைவதை தங்கள் துணையிடம் கேட்டு பெறுகிறார்கள் என்பதை அவர்களே சொல்கிறார்கள்…வாங்க பாக்கலாம்.
ஏமி ஸ்க்யூமர், நடிகை:
“நான் உச்சத்தை அடைய போகிறேன் என்பதை என் துணையிடம் சொல்லி விடுவேன். அதற்காக நான் அவரிடம், “என் க்ளிட்-ஐ பார்த்தீங்களா?” என கேட்பேன்.
நிக்கி மினாஜ், சிங்கர்:
”செக்ஸில் நம்முடைய திருப்தியை நாம்தான் கேட்டு பெற வேண்டும். அது நம்முடைய உரிமை. என் தோழி ஒருத்தி ஒருபோதும் செக்ஸில் உச்சத்தை அடைந்ததில்லை என்று சொல்லியிருக்கிறாள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.”
ஏமி போஹ்லர், நடிகை:
“நீங்கள் திருப்தி அடையும் வரை விடாதீங்க. எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்லை.
மார்க்ரெட் சோ, நடிகை:
“செக்ஸ் விசயத்தில் நான் என்னை ஏமாத்தவே மாட்டேன். எவ்வளவு நேரமானாலும் திருப்தியை அடையணும். செக்ஸ் பத்தி மத்தவங்க என்ன பேசுனாலும் கவலை கிடையாது. முதலில், செக்ஸ் உங்களுக்கானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். செக்ஸ் ரொம்ப சிறப்பானது. நீங்களும் திருப்தியை அடைந்தால். இல்லையென்றால் அதைவிட மோசமான விசயம் கிடையவே கிடையாது.”
ரஷிதா ஜோன்ஸ், எழுத்தாளர்:
“பெண்கள் செக்ஸை இன்பமான ஒரு விசயமாக நினைக்கணும். அதை ஒரு நல்ல விசயம்னு நினைச்சு செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் போதுதான் செக்ஸ் இன்பமானதாக இருக்கும்.” ஆபாசப் படங்களெல்லாம் ஆண்களுக்கானதாகவே உள்ளதென்று விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
கிம் காட்ரல், நடிகை:
“ஆண்களுக்கு பெண்களை எப்படி செக்ஸில் உச்சத்தை அடைய வைப்பது என்று தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவர்களுக்கு தெரிந்திருந்தால்தான் பெண்களால் திருப்தியை அடைய முடியும்.”. இவர் பெண்கள் செக்ஸில் திருப்தி அடைவது ஒரு கலை என ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். (Satisfaction: The Art of The Female Orgasm)
ஹாலே பெரி, நடிகை:
”பெண்களால் எப்படி செக்ஸில் உச்சத்தை அடைய முடியும் என்பதை பெண்கள்தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அது உண்மை. இப்பொழுது அதை எப்படி அடைவது என்பதற்கான தந்திரங்களை நான் தெரிந்து வைத்திருக்கிறேன். நான் எதற்காகவும் இப்பொழுதெல்லாம் வெயிட் செய்வது இல்லை. அதை அடைவதற்கான வேலைகளில் நான்தான் முன்னெடுப்பேன். 22 வயது வரை எனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது.”
லிஸி கேப்லன், நடிகை:
”ரொம்ப எளிதில் திருப்தியை அடையும் அளவுக்கு ஆண்களின் உடலமைப்பை விட பெண்களின் உடலமைப்பு இருக்கிறது. பல வழிகளில் பெண்கள் செக்ஸில் உச்சத்தை அடையலாம். ஆனால் ஆண்களுக்கு அப்படியல்ல. அவர்கள் உண்மையில் பாலியல் விளையாட்டு வீரர்கள், ஆண்கள் அல்ல.”
பேயோன்ஸ், நடிகை:
“பெண்கள், தொழிலதிபராக, தாயாக, நடிகையாக, பெண்ணியவாதியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்படி இருந்தாலும் செக்ஸ்க்கான ஒருவர்தான். பெண்கள் தங்களுடைய பாலியலை உரிமை கொண்டாடணும்.”
சோ சால்டானா, நடிகை:
“படுக்கையில் எதனாலும் தடுத்த நிறுத்த முடியாதபடி இருங்கள். பயப்படாதீர்கள். புதுமையாக முயற்சி செய்யுங்கள்.”
ஏவா லங்கோரியா, நடிகை
“செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வரை எனக்கு செக்ஸில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை.