1. பொதுவாகவே பொசிஷிவ்நெஸ் என்பது ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஒரு கட்டத்தில் இதுவே பெரும் சண்டையாக வெடிக்கவும் வாய்ப்புண்டு. எல்லா பெண்களுக்கும் திருமண வாழக்கைக்கு முன்னர் ஒரு ஆண் மீது ஈர்ப்பு அல்லது காதல் ஏற்படுவது வழக்கம் தான். என்றாவது அப்பாவி மனைவி கணவரிடம் இது குறித்து உலறி, சீரியஸ் கணவராக இருந்து விட்டால் இந்த பொசிஷிவ்நெஸ் விஸ்வரூபம் எடுக்கும். இது கணவருக்கு கணவர் வேறுபடும்
2. அடுத்து பிறந்த வீட்டில் ஏதாவது பணக்கஷ்டம் என்றால் கணவரிடம் இது குறித்து முறையிட சங்கடப்படுவார்கள். ஏனெனில் என்னதான் கணவராக இருந்தாலும் கூட பிறந்த வீட்டின் பெருமையை பாடிய நாமே கணவரிடம் உதவி கேட்பதா என தயங்குவார்கள். பெரும்பாலும் தந்தையை வேறுபக்கம் உதவி கேளுங்கள் என்றுதான் பெண்கள் கைகாட்டுவார்கள். அதுவும் ஒருவித அக்கறையின் வெளிப்பாடே!
3. அடுத்து பணிக்காரணமாக தன் குடும்பத்தை விடுத்து தனித்து வாழும் பெண்கள் தனிமைக்கு உள்ளாக நேரிடலாம். மனம் விட்டு பேச சுற்றம் இல்லாமல், தன்னை புரிந்து கொள்ள யாரும் இல்லையே, மனதிற்குள் புழுங்கி கொண்டிருப்பார்கள். மனதிற்குள் மட்டும் உள்ள இந்த வார்த்தைகளை வெளியே சொல்லிவிட்டால், இதனை தனக்கு சாதகமாக யாராவது பயன்படுத்தி கொள்வார்களோ என்ற பயத்திலே பல பெண்கள் ஆதரவு இல்லாவிடினும் பரவாயில்லை என மனநெருடலோடே வாழ்ந்து விடுகின்றனர். வெளுத்தது எல்லாமே பால் இல்லை என அவர்களுக்கும் தெரியும்.
4. இவை இல்லாமல் கல்லூரி வட்டாரத்தில் உள்ள பெண்களாக இருப்பின் ஆண் நண்பரிடம் பணம் தொடர்பான தேவையை கேட்கவும் சங்கடமாக உணர்வார்கள்.
5. இறுதியாக முக்கியமான ஒன்று என்னவென்றால், எல்லா பெண்களும் ஏதோ ஒரு வகையில் பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு தான் வந்திருப்பார்கள். இதனை எந்த காலத்திலும் ஒரு ஆணிடம் பகிர்ந்து கொள்ள சங்கடமாக உணர்வார்கள்.